கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

கொரோனா அச்சம் காரணமாக மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை உலக முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழப்புகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காவு வாங்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை ஆட்டோமொபைல் துறையை பெரிதும் சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

கொரோனா பிரச்னையால் உற்பத்தி, விற்பனை முடங்கி இருப்பதால், இதிலிருந்து வெளிவருவதற்கு கடுமையான பிரத்யேனங்களை வாகன நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், உலக அளவில் ஆட்டோமொபைல் கண்காட்சிகளும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

இந்த வரிசையில், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சி உலக அளவில் மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் ஐக்மா மோட்டார்சைக்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

இந்த ஆண்டு நவம்பர் 3 முதல் 8ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த ஆண்டு கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

உலகின் அனைத்து முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய பைக் மாடல்களை ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சி மூலமாக அறிமுகம் செய்வது வழக்கம். உலக அளவில் வாடிக்கையாளர்கள் கவனத்தை எளிதாக ஈர்க்கும் தளமாக இருந்து வருகிறது.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. அங்கு தற்போது கொரோனா பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டாலும், முழுமையாக பிரச்னை தீர்ந்தபாடில்லை.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

மேலும், ஐக்மா கண்காட்சிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பார்வையாளர்களும், இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தரும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதை கருதி இந்த ஆண்டு கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து!

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை ஐக்மா மோட்டார்சைக்கிள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, பிஎம்டபிள்யூ மோட்டோராட் மற்றும் கேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஐக்மா உள்ளிட்ட கண்காட்சிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
EICMA 2020 motorcycle show cancelled this year due to corona pandemic.
Story first published: Friday, June 26, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X