Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கியர் வசதி கொண்ட இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்... கோயம்புத்தூரில் சோதனை...
விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இமோஷன் சூர்ஜ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கோயம்புத்தூர் அருகே சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இமோஷன் மோட்டார்ஸ் சூர்ஜ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருந்தது.

கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட இந்த எலக்ட்ரிக் பைக்கை வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனம் முதலில் திட்டமிட்டு இருந்தது.

ஆனால் அதன்பின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததும் பைக்கின் தயாரிப்பிற்கு தேவையான முக்கிய பாகங்கள் வழங்குவோர் உடனான தொடர்பு துண்டித்து போனதால் இதன் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்சமயம் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்திய ஆட்டோமொபைல் துறை மெல்ல மெல்ல வளர்ச்சி பாதையை நோக்கி நகர்கிறது.

அடுத்த வருடத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இமோஷன் சூர்ஜ் பைக் தான் இந்தியாவின் முதல் கியர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக தயாரிப்பு பணியில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் பைக் இதுவரை சுமார் 30 ஆயிர கிமீ வரையிலான சோதனைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

சூர்ஜ் 6கே மற்றும் சூர்ஜ் 10கே என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் சமீபத்திய படங்களை (மாதிரி நிலையில்) தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த வேரியண்ட்களில் சூர்ஜ் 6கே குறை-தொழிற்நுட்பங்களுடன் குறைவான ஆற்றலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த அளவிற்கு என்றால், 10கே-வை காட்டிலும் 40 சதவீதம் குறைவான மோட்டார் ஆற்றலில் தான் சூர்ஜ் 6கே இயங்கும். இதன் அதிகப்பட்ச வேகம் 100kmph ஆகும்.

மற்றொரு வேரியண்ட்டான சூர்ஜ் 10கே-வின் அதிகப்பட்ச வேகம் 120kmph-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கின் டார்க் திறன் 28 என்எம் என்ற அளவில் இருக்கும்.

இந்த இ-மோட்டார்சைக்கிளில் முழு சார்ஜில் 200கிமீ வரையில் பைக்கை இயக்கக்கூடிய, 2.88kWh ஆற்றலில் நீக்கக்கூடியதான பேட்டரி தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 3.5 மணிநேரங்கள் தேவைப்படும். ஆனால் டிசி விரைவான-சார்ஜரை பயன்படுத்தினால் வெறும் 50 நிமிடங்களில் முழு சார்ஜ் நிரம்பிவிடும்.

கருப்பு/சிவப்பு என்ற ட்யூல்-டோன் நிறத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இமோஷன் சூர்ஜ், 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கன்சோல், ஸ்மார்ட்போன் இணைப்பு, நாவிகேஷன், மேகக்கணி தொழிற்நுட்பம், புவி-குறியீடுதல், ஆண்டி-தீஃப்ட், ஸ்மார்ட் கீ, ரிவர்ஸ் மோட் உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக கொண்டிருந்தது.

சூர்ஜ் எலக்ட்ரிக் பைக்கின் மூலமாக இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள இமோஷன் நிறுவனம் எதிர்காலத்தில் தனது தயாரிப்புகளை மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லும் நோக்கில் உள்ளது. சூர்ஜ்ஜின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.30 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம் 10கே வேரியண்ட்டின் விலை இதனை விட ரூ.25 ஆயிரம் அதிகமாக இருக்கும்.