தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

தொடர்ப்பு எதிர்ப்பு காரணமாக சீன நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு ஐரோப்பிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றில் சீன தயாரிப்புகள் மிக தாரளமாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றன. மக்கள் மத்தியில் அவற்றிற்கு கிடைத்து வரும் நல்ல வரவேற்பே இதற்கு காரணம். அவை மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்ற காரணத்தினாலயே மக்களிடம் பேராதரவை பெற்று வருகின்றன.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

ஆனால், சீன தயாரிப்புகள் பெரும்பாலானவை குறைந்த ஆயுட் காலத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இருப்பினும், மலிவு விலையில் கிடைப்பதால் மக்கள் அப்பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அதேசமயம், சீன தயாரிப்புகள் குறைந்த ஆயுட்காலத்தை மட்டுமே கொண்ட பொருட்களாக இல்லை. அவற்றில் பல பிரபலமான நிறுவனங்களின் டூப்ளிகேட் வெர்ஷன்களாகவும் காட்சியளிக்கின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

அந்தவகையில், சீன நிறுவனங்கள் டூப்ளிகேட் செய்யாத தயாரிப்புகளே இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு, அனைத்துத் துறை பயன்பாட்டு பொருட்களையும் ஒரு சில சீன நிறுவனங்கள் போலியாக தயாரித்து வருகின்றன.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

அதிலும், வாகனங்களை டூப்ளிகேட் செய்வதில் சீன நிறுவனங்கள் கை தேர்ந்தவையாக இருக்கின்றன. அப்படியாக டூப்ளிகேட் செய்யப்பட்ட ஸ்கூட்டருக்குதான் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சொத்து சார் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

பியாஜியோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான வெஸ்பாவைதான் இம்முறை சீன நிறுவனம் டூப்ளிகேட் செய்துள்ளது.

வெஸ்பா பிராண்டின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக பிரைமவேரா (Primavera) இருக்கின்றது. இதன் ட்வின் மடாலாக தோன்றும் வகையிலேயே சீன ஸ்கூட்டர் காப்பி-பேஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றது.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

இதனால், அதிர்ச்சியுற்ற பியாஜியோ நிறுவனம் (வெஸ்பாவின் தாய் நிறுவனம்) சீன நிறுவனத்தின் குறிப்பிட்ட காப்பி தயாரிப்பிற்கு தடை கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவுசார் சொத்து அலுவலகத்தில் புகாரளித்தது. இந்த புகாரையடுத்து விசாரைணை மேற்கொண்ட அந்த அமைப்பு சீன நிறுவனம் டூப்ளிகேட் செய்திருப்பதை உறுதி செய்தது.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் எந்தவொரு நாட்டிலும் அந்த ஸ்கூட்டரை விற்கக்கூடாது என தடையும் விதித்தது.

இந்த தடையால் வெஸ்பாவின் இரட்டையராக உருவாகியிருக்கும் சீன நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பனைச் செய்ய முடியாமல் தேங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

சீன நிறுவனத்தின் இந்த டூப்ளிகேட் ஸ்கூட்டர்கள் கடந்த 2019ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரத்தில் நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

அப்போது, அந்த ஸ்கூட்டர்களைப் பார்த்த பெரும்பாலானோர், அதனை வெஸ்பா பிரைம்வேராவின் அடுத்த தலைமுறை ஸ்கூட்டராகவே கருதினர். ஏனென்றால், யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் அந்த ஸ்கூட்டர் மிகவும் நேர்த்தியாக டூப்ளிகேட் செய்யப்பட்டிருந்தது.

எனவே, இந்த ஸ்கூட்டரின் உருவத் தோற்றத்திற்கு ஏற்கனவே நாங்கள் காப்பி ரைட்ஸ் அனுமதி வாங்கிவிட்டோம் என வெஸ்பா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை மேற்கொண்டு வந்த ஐரோப்பிய நீதிமன்றம் தற்போது பியாஜியோ நிறுவனத்திற்கே சாதகமாகவே தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

வெஸ்பா நிறுவனத்தின் தயாரிப்புகள் இதுபோன்று டூப்ளிகேட் செய்யப்படுவது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுமாதிரியான சோதனைகள் பலவற்றை அது உலக சந்தையில் சந்தித்துள்ளது. மேலும், அதில் வெற்றியையும் அது கண்டுள்ளது.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

இதுபோன்ற டூப்ளிகேட் வெர்ஷன்கள் உண்மையான மாடலுக்கு டஃப் கொடுப்பதுடன், அதன் விற்பனைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவேதான் முன்னதாக உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் செலவைப் பொருட்படுத்தாமல் போட்டி நிறுவனங்களின் டூப்ளிகேட் மாடல்களை சட்ட ரீதியாக அணுகி வெளியேற்றி வருகின்றனர்.

தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!

ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விற்பனை இலக்கை எட்ட முடியாமல் வெஸ்பா நிறுவனம் தவித்து வருகின்றது. இந்நிலையில், இதுபோன்ற டூப்ளிகேட் வெர்ஷன்களாலும் அது இன்னல்களைச் சந்திக்க ஆளாகியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
EUIPO Declared The Chinese Product As Invalid. Read In Tamil.
Story first published: Tuesday, May 26, 2020, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X