எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

குர்கானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எவோலெட் தற்சமயம் டெல்லிக்கு அருகே நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய எலக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்தி உள்ளது.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

எவோலெட் டெர்பி:

ஏத்தர் மற்றும் ஒகினாவா நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எவோலெட்டின் இந்த டெர்பி இவி ஸ்கூட்டர் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் இரு விதமான வேரியண்ட்களை எவோலெட் நிறுவனம் வழங்கியுள்ளது.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

இதில் டெர்பி இஇசட் வேரியண்ட் 60 வோல்ட்/ 30 Ah ஆற்றலில் VRLA பேட்டரியையும், மற்றொரு டெர்பி கிளாசிக் வேரியண்ட் இதே 60 வோல்ட்/ 30 Ah பவரில் லித்தியம்-இரும்பு பேட்டரி அமைப்பையும் பெற்றுள்ளன.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

டெர்பி இஇசட் வேரியண்ட் இந்திய சந்தையில் ரூ.46,499லிருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல் டெர்பி கிளாசிக் வேரியண்ட் ரூ.59,999 என்ற விலையை எக்ஸ்ஷோரூம்களில் பெறவுள்ளது.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

எவோலெட் வாரியர்:

ஆப்-ரோடு பிரியர்களுக்கு ஏற்ற டிசைனில் எவோலெட் நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாடல் தான் வாரியர். எலக்ட்ரிக் ஏடிவி வாகன பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த வாகனம் இதுபோன்ற முரட்டுத்தனமான டிசைனில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் மிக குறைவான வாகனங்களில் ஒன்றாக விளங்கவுள்ளது.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

அதிகளவில் ஓட்டுனருக்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கும் இந்த வாரியர் மாடல், சிங்கிள் சார்ஜில் 50கிமீ தூரம் வரை இயங்கும் ஆற்றல் கொண்டது. இதன் அதிகப்பட்ச வேகம் 60 kmph ஆகும். இதன் விலை ரூ.1.40 லட்சத்தில் நிர்ணயிக்கப்படவுள்ளது.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

இந்த இரு எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமில்லாமல், இவற்றுடன் ஆட்டோ எக்ஸ்போவில் எவோலெட் நிறுவனத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்ட போலோ, போனி, ரேப்டர் மற்றும் ஹாவ்க் உள்ளிட்ட எலக்ட்ரிக் வாகனங்களும் இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எவோலெட் நிறுவனத்தின் புதிய டெர்பி & வாரியர் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

எவோலெட் நிறுவனம், ரிஸ்ஸலா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Evolet Derby and Warrior Unveiled At Auto Expo
Story first published: Sunday, February 9, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X