மிகவும் எளிமை! குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை டெலிவரி பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்! யாருனு தெரியுமா?

பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆம்பியர் நிறுவனத்தின் புதுமுக மின்சார ஸ்கூட்டரான மேக்னஸ் ப்ரோ மாடலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

உலகமே மின் வாகன மயமாக்கலை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இதற்கு, மின் வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என்பதே மிக முக்கியமான காரணமாக உள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் உலகையே உலுக்கி வரும் புவி வெப்ப மயமாதல் பிரச்னைக்கு முற்று புள்ளி வைக்க இது உதவும் என நம்பப்படுகின்றது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

எனவேதான் உலக நாடுகள் பல தங்கள் குடி மக்களை மின் வாகனங்களின் ஈர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதே பணியைதான் இந்தியாவும் அண்மைக் காலங்களாக மேற்கொண்டு வருகின்றது. அதிலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து மின் வாகன ஊக்குவிப்பு மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா, ஆம்பியர் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டரை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னஸ் ப்ரோ மாடலே அவரின் கை வசம் புதிதாக வந்து சேர்ந்துள்ளது. இதனை ஆம்பியர் நிறுவனமே பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இந்திய நிறுவனமான கிரீவ்ஸ் காட்டனுடன் இணைந்தே ஆம்பியர் அதன் இருசக்கர மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது. இந்த நிலையில், இவ்விரு நிறுவனங்களும் இணைந்து கிரிக்கெட் வீரர்களை வைத்து ஓர் சிறப்பு நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பதாக கூறப்படுகின்றது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

அதில், பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹீத் ஸ்ட்ரீக், திரஜ் மல்ஹோத்ரா (டெல்லி கேபிடல்ஸ்ஸின் சிஇஓ) மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே ராபின் உத்தப்பாவிற்கு ஆம்பியர் நிறுவனத்தின் மேக்னஸ் ப்ரோ மின்சார ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இதை அவர் பெறும்போது அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆம்பியர் நிறுவனத்தின் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 73,990 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இதில், 1200வாட் திறன் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது வெறும் 10 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ என்ற வேகத்தை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது ஆகும். மேலும், இது உச்சபட்சமாக மணிக்கு 55 கிமீ வேகத்தில் பறக்கும் திறனையும் கொண்டிருக்கின்றது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இதுமட்டுமின்றி இந்த மின்சார ஸ்கூட்டரில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இத்துடன், பிரேக்கிங் வசதிக்காக இரு வீல்களிலும் சிபிஎஸ் அம்சத்துடன் கூடிய டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இதனை ஆம்பியர் நிறுவனம், அதன் ஜீல் மாடல் மின்சாரை ஸ்கூட்டரை ஒத்தவாறே உருவாக்கியுள்ளது. இதன் சேஸிஸ் தோற்றத்தில் லேசாக மாற்றத்தை செய்து மேக்னஸ் ப்ரோ மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், இவ்விரண்டு மாடலுக்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் ரேஞ்ஜ் வித்தியாசத்தில் இரண்டும் தனித்துவமான வசதியைப் பெற்றிருக்கின்றன.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

மேக்னஸ் ப்ரோ மின்சார ஸ்கூட்டரில் எல்இடி ஹ்ட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், அப்ரோன் மவுன்டட் ஸ்டோரேஜ், யுபிஎஸ் போர்ட், பூட் லைட், கீ லெஸ் என்ட்ரீ, 10 இன்ச் வீல், ட்யூப் லெஸ் டயர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி மிக முக்கியமான அம்சமாக பேட்டரி பவரை பத்து சதவீதம் வரை மீட்டமைக்கும் திறன் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இதற்கு ஆம்பியர் மேக்னஸ் மின்சார ஸ்கூட்டரை குறைந்ததது 10 கிமீ வரை பயணிக்க வேண்டும். அவ்வாறு, ஒவ்வொரு பத்து கிமீ பயணத்திற்கும் அதன் பேட்டரிகள் தானாகவே பத்து சதவீதம் சார்ஜைப் பெற்றுவிடும். இதனாலயே, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மிகச்சிறப்பான மின்சார ஸ்கூட்டராக இது பார்க்கப்படுகின்றது.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

மத்திய அரசு தரப்பில் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக ஃபேம் எனும் சிறப்பு சலுகைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சிறப்பு திட்டத்தின் 2ம் படி பயன்பாட்டில் இருக்கின்றது. இதன்மூலம் புதிதாக மின் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் மற்றும் நாட்டில் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பது உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மிகவும் எளிமை! விலை குறைந்த மின்சார ஸ்கூட்டரை பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா மிரண்டுவீங்க!

இந்த நிலையிலேயே மக்களுக்கு முன்னோடியாக மாறும் விதமாக ராபின் உத்தப்பா அவர்களுக்கு ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ மின்சார ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை வருங்காலத்தில் இயக்கி, அவரின் ரசிகர்களையும் அவரது வழி பின்பற்றச் ச செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Famous Cricketer Robin Uthappa Takes Delivery Of Ampere Magnus Pro Electric Scooter. Read In Tamil.
Story first published: Tuesday, August 11, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X