சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் அசத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழும் கேடிஎம் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் உள்நாட்டில் விற்பனை செய்த மற்றும் ஏற்றுமதி செய்த பைக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி கேடிஎம் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 6,472 மோட்டார்சைக்கிள்களை உள்நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் வெறும் 4,699 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது 1,773 பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 37.73 சதவீத வளர்ச்சியாகும். மார்க்கெட் தள்ளாடி கொண்டிருக்கும் நிலையில் கேடிஎம் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

உள்நாட்டு விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதை போலவே ஏற்றுமதியிலும் கேடிஎம் நிறுவனம் 17.88 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 4,570 பைக்குகளை மட்டுமே கேடிஎம் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் கேடிஎம் ஏற்றுமதி செய்த பைக்குகளின் எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 5,387 ஆக உயர்ந்துள்ளது.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

இந்தியாவை பொறுத்தவரை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,900 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதன் மூலம், கேடிஎம் 200தான் (ட்யூக் + ஆர்சி) மிகவும் பிரபலமான கேடிஎம் மாடலாக உள்ளது. இது 41.26 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனையான கேடிஎம் 200 மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை வெறும் 2,053 மட்டுமே.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

ஆனால் ஏற்றுமதியை பொறுத்தவரை கேடிஎம் 200 மூன்றாவது இடத்தில் வருகிறது. நடப்பாண்டு பிப்ரவரியில் 738 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 1,037 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 28.83 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மார்க்கெட்டில் அடுத்த 'பெஸ்ட்செல்லர்' கேடிஎம் 390தான் (ட்யூக் + ஆர்சி).

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 1,505 கேடிஎம் 390 பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 420.76 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 289 கேடிஎம் 390 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஏற்றுமதியும் கூட 90.41 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 1,857 யூனிட்களில் இருந்து 3,536 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

மூன்றாவது இடத்தில் கேடிஎம் 125 (ட்யூக் + ஆர்சி) இருக்கிறது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 1,476 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கேடிஎம் 125 மார்க்கெட்டில் செல்வாக்கை இழந்து வருவது போல் தெரிகிறது. ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3,014 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. இது 51.03 சதவீத வீழ்ச்சியாகும்.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

இதேபோல் ஏற்றுமதியிலும் அடி விழுந்துள்ளது. 1,116 யூனிட்களில் இருந்து 840 யூனிட்களாக ஏற்றுமதி சரிந்து போயுள்ளது. இது 24.73 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்த பட்டியலில் அடுத்தபடியாக இருப்பது கேடிஎம் 250 ட்யூக். நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 589 கேடிஎம் 250 ட்யூக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 71.72 சதவீத வளர்ச்சியாகும்.

சூப்பர்... கேடிஎம் நிறுவனம் செய்த அசத்தலான காரியம்... இந்தியாவில் மட்டும் இல்ல... வெளிநாட்டிலும்தான்

ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 343 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த பைக்கின் ஏற்றுமதி 51.25 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 560 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வெறும் 273 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன.

ஐந்தாவது இடத்தில் இருப்பது கேடிஎம் 790 ட்யூக். நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதேபோல் இந்த பைக்கின் ஏற்றுமதியும் கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. ஏனெனில் ஒரு யூனிட் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
February 2020: KTM Sales Report. Read in Tamil
Story first published: Saturday, March 28, 2020, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X