டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

டெபிட் கார்டை அடிப்படையாகக் கொண்டு இரு சக்கர வாகனங்களை இஎம்ஐ-யில் வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

வங்கிகளின் நிதியுதவி அல்லது கிரெடிட் கார்டு ஆகியவை இருந்தால் மட்டுமே நம்மால் வாகனங்களை இஎம்ஐ-யில் வாங்க முடியும் என்ற நிலை தற்போது நிலவி வருகின்றது. இதில் இருந்து சற்று மாறுபடும் விதமாக பிரபல ஃபெடரல் வங்கி டெபிட் கார்டின் மூலமாகவும் இஎம்ஐ திட்டத்தில் வாகனங்களை வாங்க முடியும் என அறவித்துள்ளது. இந்த சிறப்பு திட்டத்தையை அந்த வங்கி தற்போது தொடங்கியிருக்கின்றது.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

இதனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களைக் கிரெடிட் கார்டு அல்லது பிற வங்கியின் துணையின்றி சுலப மாதத் தவணையில் வாங்கக் கூடிய சூழல் உருவாகியிருக்கின்றது. அதாவது, ஃபெடரல் வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தி ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களின் ஸ்கூட்டர்களை கிரெடிட் கார்டு இல்லாமலயே வாங்க முடியும்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

இதற்காக ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஃபெடரல் வங்கியின் நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதற்காக மேற்கூறிய நிறுவனங்களின் 947 ஷோரூம்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு ஃபெடரல் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளாமலே இஎம்ஐ மூலம் பெற இருசக்கர வாகனங்களைப் பெற முடியும்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

3,6,9,12 ஆகிய மாத இஎம்ஐ திட்டத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக ரூ. 1 மட்டுமே முதல் கட்டணமாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்த ஒரு ரூபாய் கட்டணத்தை ஃபெடரல் வங்கி வசூலிக்கின்றது.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

இந்த நடவடிக்கைகளின் மூலம், இந்தியாவிலேயே இருசக்கர வாகனத்தை டெபிட் கார்டின் அடிப்படையில் இஎம்ஐ-க்கு வழங்கும் முதல் வங்கி என்ற பெறுமையை ஃபெடரல் பேங்க் பெற்றிருக்கின்றது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

தொடர்ந்து, டெபிட் கார்டு இஎம்ஐ திட்டத்தன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக 5 சதவீத கேஷ்பேக் சலுகையையும் ஃபெடரல் வங்கி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பண்டிகைக் கால சலுகையாக இந்த சிறப்பு தள்ளுபடியை வழங்க வங்கி திட்டமிட்டுள்ளது.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

ஃபெடரல் வங்கியின் இந்த சிறப்பு திட்டத்திற்கு நாம் தகுதியானவரா என்பதை அறிந்துக் கொள்ள சில சுலப வழிகளையும் பேங்க் வழங்கியிருக்கின்றது. 5676762 என்ற எண்ணிற்கு 'டிசி இஎம்ஐ' என டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அல்லது, 7812900900 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இவற்றைச் செய்த சில விநாடிகளிலேயே நாம் டெபிட் கார்டு இஎம்ஐ திட்டத்திற்கு தகுதியானவர்களா?, என்ற தகவல் குறுஞ்செய்தி வாயிலாக கிடைத்துவிடும்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

இதைத்தொடர்ந்து விற்பனையாளர்களைத் தொடர்பு கொண்டு தேவையான இரு சக்கர வாகனத்தை நமது வீட்டு அழைத்து வரலாம். முன்னதாக சில ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும். இதையடுத்தே விற்பனையாளர்கள் விருப்பப்பட்ட இருசக்கர வாகனத்தை டெலிவரிக்கு வழங்குவர்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

சிறப்பு இஎம்ஐ திட்டத்திற்கான வட்டி விகிதம் பற்றிய துள்ளியமான தகவல் வழங்கப்படவில்லை. பிற வங்கிகளைப் போலவே குறைந்தபட்ச வட்டி விகிதத்துடன் ஃபெடரல் வங்கி இருசக்கர வாகனங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், வட்டி விஷயத்தில் வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

அதேசமயம், கிரெடிட் கார்டு இல்லாமல் வெறும் டெபிட் கார்டை மட்டுமே முன் வைத்து வாகனங்களுக்கு கடன் வழங்கப்படும் என வங்கி அறிவித்திருப்பது சற்றே சிக்கலானது. ஆவணங்கள் பலவற்றை முறையாக வழங்கி கடன் வாங்கியவர்கள் பலரே கடனைத் திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு நாடு தப்பிக்கின்றநிலையில், தற்போதைய அறிவிப்பு ஃபெடரல் வங்கிக்கு எம்மாதிரியான பலனை அளிக்கும் என்பது தெரியவில்லை.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

எனவே, டெபிட் கார்டுக்கான இஎம்ஐ ஒப்புதல் வழங்குவதற்கு வங்கி தரப்பில் அதிக நிபந்தனைகள் கடைபிடிக்கப்படலாம் என யூகிக்கப்படுகின்றது. இருப்பினும், ஃபெடரல் வங்கியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் பொது போக்குவரத்தைத் தவிர்த்துவிட்டு, சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இதற்காக ஒரு சிலர் புதிய வாகனங்களை வாங்கவும் ஆரம்பித்துள்ளனர். அத்தகையோருக்கு ஃபெடரல் வங்கியின் டெபிட் கார்டு இஎம்ஐ திட்டம் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், 5 சதவீத கேஷ்பேக் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Federal Bank Offers Debit Card EMI Scheme For Two Wheelers. Read In Tamil.
Story first published: Wednesday, September 23, 2020, 18:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X