மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

கொரோனா வைரஸினால் இந்திய சந்தை மிக பெரிய அளவில் நஷ்டத்தையும் சரிவையும் சந்திந்து வருகிறது. ஆனால் புதிய வாகனங்களுக்கான எதிர்காலம் நமது நாட்டு சந்தையில் தற்போதும் பிரகாசமாகவே உள்ளது. இதன் காரணமாக பல புதிய நிறுவனங்கள் இந்தியாவிற்கு விரைவில் வருகை தரவுள்ளன. அதேநேரம் தற்போதைய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

இந்த வகையில் இந்திய சந்தையில் இந்த வருட இறுதிக்குள்ளாக புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுகங்கள் வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் 5 பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

1. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300

இந்தியாவில் தற்சமயம் ரூ.1.06 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஆஃப்-ரோட்டிற்கு இணக்கமான எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அதிக திறன் கொண்ட வெர்சனாக எக்ஸ்பல்ஸ் 300 பைக் மாடலை இந்தியாவிற்கு கொண்டுவர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

இந்த புதிய 300சிசி பைக்கில் டிஎஃப்டி டிஜிட்டல் திரை, ஸ்மார்ட்போன் ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் மற்றும் முழு-எல்இடி ஹெட்லேம்ப்பை எதிர்பார்க்கலாம். அதேபோல் 300சிசி-ல் சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் அமைப்பும் இந்த பைக்கில் பொருத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படலாம். சந்தையில் வேகமாக பிரபலமாகி வரும் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 199.6சிசி ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

2. டிவிஎஸ் செப்பெலின்

சென்னையை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் தற்போது வரை எந்த க்ரூஸர் மாடலையும் இந்தியாவில் விற்பனை செய்யவில்லை. ஆனால் தனது க்ரூஸர் கான்செப்ட்டை செப்பெலியன் என்ற பெயரில் இந்நிறுவனம் கடந்த 2018ல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

முழு எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்பை எல்இடி டெயில்லைட்டுடன் கொண்டிருந்த இந்த க்ரூஸர் மாடல் நீண்ட பெட்ரோல் டேங்குடனும், ஒற்றை இருக்கை அமைப்புடனும் காட்சியளித்தது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த பைக் விற்பனை வெர்சனில் மேற்கூறப்பட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

2018 ஆட்டோ எக்ஸ்போவில் கண்காட்சியின் போது செப்பெலியன் பைக் 220சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில் கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜினை கொண்டிருந்தது. இதன் மூலமாக பஜாஜ் அவென்ஜெர் 220 மாடலுடன் போட்டியிடும் என கூறப்படுகின்ற இந்த பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.2 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

3. கேடிஎம் 250 அட்வென்ஜெர்

சமீபத்திய 390 அட்வென்ஜெர் பைக்கை தொடர்ந்து 250 மாடலின் அட்வென்ஜெர் வெர்சனை இந்திய சந்தைக்கு கொண்டுவர கேடிஎம் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. 250 ட்யூக்கின் ப்ளாட்ஃபாரத்தில் இந்த பைக் தயாரிக்கப்பட்டாலும், அதனை விட சற்று அதிகமாக ரூ.2.50 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையினை இந்த பைக் பெறும் என தெரிகிறது.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

390 அட்வென்ஜெர் மாடலில் இருந்து ஸ்டீல்-ட்ரெல்லிஸ், சப்ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்களை 250 அட்வென்ஜெர் பைக் பெற்றாலும், அதிலும் இல்லாத வகையில் எல்இடி ஹெட்லேம்ப், விரைவான ஷிஃப்டர், கார்னரிங் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற ப்ரீமியம் வசதிகளையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

4. சுசுகி 250 அட்வென்ஜெர்

சுசுகி நிறுவனம் புதிய 250சிசி மோட்டார்சைக்கிளின் மூலமாக குறைவான திறன் கொண்ட அட்வென்ஜெர் டூரர் பிரிவில் நுழைய பல வருடங்களாக திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இந்நிறுவனத்தில் இதுவரை வெளிவராத நிலையில் அட்வென்ஜெர் ரக பைக், வி-ஸ்ட்ரோம் 250 அட்வென்ஜெர் மாடலாக தான் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

சுசுகி நிறுவனம் ஏற்கனவே வி-ஸ்ட்ரோம் 1000 மற்றும் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி போன்ற அட்வென்ஜெர் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களின் வட்டத்தை பெறுவதற்காக விற்பனைக்கு கொண்டுவரப்படும் இந்த குறைவான திறன் கொண்ட அட்வென்ஜெர் பைக் அவற்றின் தோற்றத்தை தான் பெரிய அளவில் ஒத்திருக்கும் என கூறப்படுகிறது.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

சுசுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் 250சிசி, ஃப்யூல்-இன்ஜெக்டட், ஆயில்-கூல்டு என்ஜின் சற்று மாறுதல்களுடன் இந்த அட்வென்ஜெர் பைக்கில் வழங்கப்படலாம். அதேபோல் சுசுகியின் புதிய 250 அட்வென்ஜெர் பைக் ரூ.2 லட்சத்தில் விலையை பெறலாம்.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

5. ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தண்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக மீட்டியோர் என்ற பெயரில் புதிய எடை குறைவான பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகமாக இருந்த இந்த பைக்கின் வருகையை கொரோனா தாமதப்படுத்தி விட்டது.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

இருப்பினும் இந்த கூடுதல் கால அவகாசத்தை சோதனை ஓட்டங்களுக்காக பயன்படுத்தி வரும் இந்த புதிய 350சிசி பைக், இந்நிறுவனத்தின் புதிய ஜே-ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பைக்கில் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, பிளவுப்பட்ட க்ராப் ரெயில்கள், ஹலோஜன் ஹெட்லேம்ப், டிஆர்எல், டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

இருப்பினும் மொத்த தோற்ற அடிப்படையில் இந்திய சந்தையில் இருந்து விடைபெற்று சென்ற தண்டர்பேர்டு 350 பைக்கை அதிகளவில் ஒத்து காணப்படும் இந்த புதிய பைக் மாடலில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தியுள்ள என்ஜின் தண்டர்பேர்டை காட்டிலும் சற்று கூடுதலாக 19.5 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது.

Royal Enfield Meteor Image Courtesy: Automobili Infiniti/Instagram

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
5 Most Anticipated Bike Launches Of This Year
Story first published: Saturday, May 23, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X