மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் ஹோண்டா டியோவைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

புள்ளிங்கோ வாகனம் என்று செல்லமாக அழைக்கப்படும் ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடல் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பொதுவாக, ஹோண்டாவின் இந்த ஸ்கூட்டருக்கு எப்போதுமே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல மவுசு நிலவு வருகின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்தநிலையில், ஹோண்டா நிறுவனம் இந்த டியோ ஸ்கூட்டரின் எஞ்ஜினை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்ததுடன் குறிப்பிட்ட காஸ்மெட்டிக் சேஞ்ஜையும் புதிதாக வழங்கியுள்ளது.

இதனால், ஏற்கனவே இளைஞர்களை தன் வசமே இழுத்து வந்த இந்த டியோ, கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறியிருக்கின்றது. அந்தவகையில், இந்த ஸ்கூட்டரில் கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

ஷார்பான ஸ்டைல்

ஹோண்டா நிறுவனம் இளைஞர்களை குறி வைத்தே அதன் வாகனங்களைக் களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், இந்த 110சிசி ஸ்கூட்டரிலும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை மனதில் கொண்டே புது அப்டேட்டுகளை அது வழங்கியிருக்கின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், ஆக்டிவா 6ஜி மாடலை அப்டேட் செய்ததைப் போன்று இல்லாமல், புத்தம் புதிய டிசைன் தாத்பரியங்கள் கொண்ட பேனல்கள் டியோவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இதனால், டியோவின் முன்பக்கம் கடுமையான மாற்றத்தைச் சந்தித்து, மிகவும் ஷார்ப்பான முகப்பு பகுதியைக் பெற்றிருக்கின்றது. இத்துடன், இந்த தோற்றத்தை மேலும் ஷார்ப்பாக்கும் விதமாக மிக குறுகிய மட்குவார்ட் இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இதன் பின்பக்கத்தின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. கிரேஸியா ஸ்கூட்டர்களில் காணப்படுவதைப் போன்ற மின் விளக்கு இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

ஹோண்டா நிறுவனம் எப்போதும் இந்த ஸ்கூட்டரை மிகவும் பிரகாசமான நிறத் தேர்வில் வழங்கும். இதே ஆப்ஷனைதான் தற்போதும் அது வழங்குகின்றது. ஆனால், வீல்களுக்கு தற்போது நிறம் மாற்றப்பட்டுள்ளது. பிரிமியம் ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதைப் போன்ற நிறம் வீல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் இதற்கான ஷீல்ட் உள்ளிட்டவை மிகவும் நேர்த்தியான வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

டியோவின் சேஸிஸ்

மேற்கூறிய மாற்றங்களுக்கு ஏற்ப இந்த டியோவின் சேஸிஸ் லேசாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவும் நாம் டியோ ஸ்கூட்டரில் கவனிக்க வேண்டிய ஐந்து சிறப்பம்சங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஏனென்றால், இந்த சேஸிஸ் பிஎஸ்-4 டியோவில் காணப்படுவதைக் காட்டிலும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

ஆகையால், புதிய பிஎஸ்-6 டியோ ஸ்கூட்டரின் தோற்றம் தற்போது விற்பனையில் இருக்கும் டியோவைக் காட்டிலும் நீளமானதாகவும், அகலமானதாகவும் காட்சியளிக்கின்றது. மேலும், இதன் வீல் பேஸும் 22 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரின் நிலைத் தன்மை சற்றே அதிகரிக்கச் செய்யும்.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்த நடவடிக்கைகளின் காரணமாக இதன் எடையும் சற்றே அதிகரித்துள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் 3 கிலோ அதிகரித்து காணப்படுகின்றது. இந்த மாற்றங்கள் காரணமாக முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் 12 இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ளது. இதே ஃபோர்க்தான் ஆக்டிவா 6ஜி-யிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

புதிய எஞ்ஜின்

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களிலேயே மிக முக்கியமான மாற்றமாக டியோவின் எஞ்ஜின் மாற்றம் காணப்படுகின்றது. இந்த எஞ்ஜினை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியிருப்பதே சிறப்பான அம்சமாக இருக்கின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இது, 109.51 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் ஆகும். இது, 7.76 எச்பி திறனை 8,000 ஆர்பிஎம்மிலும், 9என்எம் டார்க்கை 4,750 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதே எஞ்ஜின்தான் ஆக்டிவா 6ஜி-யில் ஹோண்டா நிறுவனம் பயன்படுத்துகின்றது. ஆனால், ஆக்டிவாவில் வெளிப்படுத்தும் திறனும், டியோவில் வெளிப்படுத்தும் திறனும் மாறுபட்டு காணப்படுகின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இதேபோன்று, முன்னதாக பிஎஸ்-4 தரத்தில் விற்பனைக்கு கிடைத்த டியோவைக் காட்டிலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியோவின் திறன் சற்றே குறைந்து காணப்படுகின்றது. இது பழைய டியோவைக் காட்டிலும் 0.16 எச்பியையும், 0.9 என்எம் டார்க்கையும் குறைவாக வெளிப்படுத்துகின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

கூடுதல் சிறப்பம்சங்கள்

ஹோண்டா நிறுவனம் அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் அதேவேலையில் சில மதிப்புகூட்டப்பட்ட அம்சங்களை கூடுதலாக சேர்த்து வருகின்றது. அந்தவகையில், ஹோண்டாவின் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் அனைத்து தயாரிப்புகளிலும் இணைக்கப்பட்டு வருகின்றது. இது, டியோவை ஆன் செய்யும்போது ஏற்படும் அதிகளவு சத்தத்தை குறைக்க உதவும். மேலும், சாலையில் செல்லும் போது எழும்பும் அதிகளவு ஒலியும் இதன்மூலம் கட்டுபடும்.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இத்துடன், முழுமையான டிஜிட்டல் திறன் கொண்ட க்ளஸ்டர் மற்றும் ஆப்ஷனலாக சைட் ஸ்டாண்டு எஞ்ஜின் இன்ஹிபிடர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ரேஞ்ச், ப்யூவல் அளவு மற்றும் பயன்பாடு, சர்வீஸ் தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பிரிமியம் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். ஸ்டாண்டர்டு மாடல்களில் அனலாக் சிஸ்டமே வழங்கப்பட உள்ளது. இதேபோன்று, இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெறுவதைப் போன்று பாஸ் லைட் மற்றும் ப்யூவல் ஃபில்டர் உள்ளிட்டவை இடம்பெறுகின்றது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

போட்டியளிக்கும் விலை

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டரில் பல்வேறு அம்சங்கள் புகுத்தப்பட்டும் அதன் விலை போட்டி நிறுவன ஸ்கூட்டர்களுக்கு கடுமையான டஃப் கொடுக்கின்ற வகையில் உள்ளது.

அந்தவகையில், பிஎஸ்-6 ஹோண்டா டியோவின் ஸ்டாண்டர்டு மாடலுக்கு ரூ. 59,990 என்ற விலையும், டீலக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 63,340 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்டாண்டர்டு வேரியண்டில் எல்இடி மின் விளக்கிற்கு பதிலாக ஹாலோஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களின் குறைவாலே ஸ்டாண்டர்டு வேரியண்டின் விலை குறைவாக உள்ளது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஹோண்டா டியோ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

அதேசமயம், தற்போது விற்பனயைில் இருக்கும் பிஎஸ்-4 டியோவைக் காட்டிலும் புதிய பிஎஸ்-6 டியோவின் விலை ரூ. 7 ஆயிரம் உயர்வைப் பெற்றிருக்கின்றது. இந்த விலையுயர்விற்கு பிஎஸ்-6 தர உயர்வே முக்கிய காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Five Things To Know About New BS6 Honda Dio. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X