டிவிஎஸ் எக்ஸ்எல்லா இது?.. பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றத்தில் புதிய இ-மொபட்!!

டிவிஎஸ் எக்ஸ்எல்-க்கே டஃப் கொடுக்க தோற்றத்தில் மின்சார மொபட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

உலக நாடுகள் அனைத்திலும் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் காற்று மாசு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு தீர்வளிக்கும் விதமாக மின் வாகனங்கள் இருக்கின்றன. எனவேதான் உலக நாடுகள் தங்களின் மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தி வருகின்றன.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் பங்காக கவர்ச்சியான மற்றும் அதிக தொழில்நுட்பங்கள் அடங்கிய மின் வாகனங்களை அறிமுகம் செய்து, அதன் மூலம் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்தவகையில், உலகின் பழையான இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான கரெல்லி சிக்லோன் இ4 எனும் மின்சார மொபட்டை புதிதாக அப்டேட் செய்துள்ளது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

புதிய அப்டேட்டின் மூலம் இ4 மொபட், டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தை மாடிஃபை செய்திருப்பதைப் போன்ற தோற்றத்தை வழங்குகின்றது. அதேசமயம், பலர் எங்களை ஏமாற்றாதீர்கள் இது மாற்றம் செய்யப்பட்ட டிவிஎஸ் எக்ஸ்எல்தான் வாக்குவாதத்திலேயே ஈடுபட ஆரம்பித்துவிடுக்கின்றனர். எக்ஸ்எல்-க்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே கரெல்லி நிறுவனம் அதனைப் புதுப்பித்துள்ளது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

மொபட்டின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே இதுமாதிரியான புதுப்பித்தல் பணியை அது செய்துள்ளது. கரெல்லி நிறுவனம், இத்தாலியை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அதன் விற்பனை மற்றும் உற்பத்தி என அனைத்து செயல்களையும் கடந்த 1987ம் ஆண்டு அது நிறுத்தியது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

இதையடுத்து மீண்டும் வாகன சந்தையில் களமிறங்கும் விதமாக சரியாக 32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வாகன தயாரிப்பை தொடங்கியது. ஆனால், இம்முறை மின்சார பைக் மற்றும் எலெக்ட்ரிக் மொபட் உற்பத்தியை மட்டுமே முக்கிய இலக்காகக் கொண்டு அது இயங்கிக் கொண்டிருக்கின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

இதனடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட மாடலே இந்த் சிக்லோன் இ4 மின்சார மொபட்டாகும். இதையே தற்போது அந்நிறுவனம் அட்டகாசமான ஸ்டைலுக்கு அப்டேட் செய்திருக்கின்றது. இதன் அப்டேட்டின் மூலம் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் அதிக ஃபெர்பார்மன்ஸ் திறன் அந்த மொபட்டிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

அதாவது, மொபட் என்றாலே மிகவும் சாதுமான தோற்றம் மற்றும் மிக எளிமையான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்ற பிம்பத்தைத் தோற்கடிக்கும் வகையில் சிக்லோன் இ4 அமைந்திருக்கின்றது. புதுப்பித்தல் காரணமாக மொபட்டின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 4,500 யூரோ மதிப்பில் இது தற்போது விற்கப்பட்டு வருகின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

இந்திய மதிப்பில் அது ரூ. 3.98 லட்சம் ஆகும். இந்த உச்சபட்ச விலைக்கு ஏற்ப சிக்லோன் இ4 மொபட்டில் பல்வேறு சிறப்பு வசிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், பிரம்மிப்பை ஏற்படுத்தும் சிறப்பம்சமாக மொபட்டில் 4kW திறனுடை மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 160 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த திறனானது மணிக்கு 70 கிமீ எனும் வேகத்தில் மொபட்டை இயக்கக்கூடிய சக்தியாகும்.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின் சக்தி 2kWh திறனுடைய கழட்டி மாட்டக்கூடிய பேட்டரி வழங்குகின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் எந்தவொரு இடையூறுமின்றி சுமார் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுவே, மொபட்டை சற்று வேகமாக, அதாவது முழு வேகத்தில் இயக்கினால் இந்த ரேஞ்ஜ் விகிதம் பாதியாக குறைந்துவிடுமாம். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் 70 கிமீ வரை ரேஞ்ஜ் குறைந்துவிடும் என கூறப்படுகின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

எனவே, எப்போதும் குறைந்தபட்ச வேகத்தில் பயணிப்பது ரேஞ்ஜிற்கும், பயணத்திற்கும் நல்லது என கரெல்லி கூறுகின்றது. இத்துடன், இந்த மொபட்டில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாப் அப்சார்பர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி சிறப்பான பிரேக்கிங்கிற்காக இரு வீல்களிலும் 220மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்குகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

தொடர்ந்து, அலாய் வீல், எல்இடி மின் விளக்கு, எல்இடி டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இருவித பயன்பாடுடைய டயர்கள் என பல்வேறு பிரிமியம் அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து சிறப்பு வசதிகளும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து இந்த மொபட்டை மிகவும் கவர்ச்சியான இருசக்கர வாகனமாக மாற்றியிருக்கின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ தோற்கடிக்கும் சிக்லோன் இ4 மின்சார மொபட்... பார்த்து முடித்த பின்பும் கண்களிலேயே நிற்கும் தோற்றம்!

புதிதாக விற்பனைக்கு வரும் மோட்டார்சைக்கிள்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருவம், திறன் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் கவர்ந்திழுக்கும் கரெல்லி நிறுவனம் இந்த புதிய அப்டேட்டை சிக்லோன் இ4 மின்சார மொபட்டிற்கு வழங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Garelli Launched Updated Ciclone E4 Moped Lineup. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X