ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெமோபாய் இந்த வருட தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்திற்காக அட்டகாசமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுப்படியாகும் விதத்தில் ஜெமோபாய் அறிவித்துள்ள இந்த தள்ளுபடி சலுகைகள் அனைத்தும் அதன் மிசோ, அஸ்ட்ரிட் லைட் மற்றும் ரைடர் ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும். தள்ளுபடிகள் ரூ.2,000-ல் இருந்து ரூ.5,500 வரையில் ஸ்கூட்டர் மாடலை பொறுத்து உள்ளன.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

சலுகைகளை நவம்பர் 20ஆம் தேதிக்கு உள்ளாக ஜெமோபாய் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும்.இந்த பணத்தை வாடிக்கையாளர் கிரெட்ஆர்-ல் மீட்டெடுக்கும் வகையில் இருக்கலாம்.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

அதாவது இந்த வவுச்சரை வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களை கிரெட்ஆர்-க்கு விற்கும்போது பயன்படுத்தலாம்.இந்த பண்டிகை காலத்தில் ஜெமோபாய் எலக்ட்ரிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனையை அதிகரிப்பதும், பெட்ரோல் வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதும் தான் தற்சமயம் இலக்காக உள்ளது.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

இதன் காரணமாக குறைந்த விலையில் மாசில்லா சுற்றுச்சூழலுக்கு தேவையான ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சொந்தமாக்குவது எளிதாகியுள்ளது.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் குறித்து ஜெமோபாய் எலக்ட்ரிக் பிராண்டின் நிறுவனர் அமிட் ராஜ் சிங் கருத்து தெரிவிக்கையில், "தற்போதைய லாக்டவுன் சூழ்நிலையில், ஏராளமான நுகர்வோர் மலிவு மற்றும் பாதுகாப்பான தனிப்பட்ட இயக்கத்தை தான் விரும்புக்கிறார்கள். இதுவே அவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

தொந்தரவு செய்கிறோம் என நினைக்க வேண்டாம், நேசத்துக்குரிய அனுபவமாக ஜெமோபாய் ஸ்கூட்டரை சொந்தமாக வைத்திருப்பவர்களை உறுதிப்படுத்த விரும்புகிறோம். வரவிருக்கும் விழாக்களுடன், எலக்ட்ரிக் மொபைலிட்டியில் ஆர்வமாக உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் முடிந்த உதவியாக சிறந்த சலுகைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்" என கூறினார்.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

ஜெமோபாய் நிறுவனத்திற்கு தற்சமயம் இந்தியாவில் 60 டீலர்ஷிப்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. அனைத்து டீலர்ஷிப்களும் ஒரு சேவை மையத்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. 60 என்ற எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்பதும் ஜெமோபாய் நிறுவனத்தின் தற்போதைய விருப்பங்களில் ஒன்று.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

இந்த கொரோனா சூழ்நிலையில் மக்கள் அனைவரும் சொந்த வாகனங்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு அதிக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய வேண்டும் என இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது. கிரெட்ஆர் நிறுவனத்துடன் ஜெமோபாய் ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியினால் உங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொண்டுவந்து குறைந்து விலையில் ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டி செல்லலாம்.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

ஜெமோபாய் பிராண்டில் இருந்து தற்சமயம் விற்பனை செய்யப்படும் மேற்கூறிய 3 ஸ்கூட்டர் மாடல்களில் மிசோ, முழு சிங்கிள் சார்ஜில் கிட்டத்தட்ட 70 கிமீ தூரம் இயங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. அதேநேரம் ரைடர் மற்றும் அஸ்ட்ரிட் லைட் என்ற மாடல்களில் முழு பேட்டரியையும் நிரப்பி கொண்டு சுமார் 90 கிமீ வரை பயணிக்கலாம்.

ஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி

அதிலும் அஸ்ட்ரிட் லைட் ஸ்கூட்டர் சில கூடுதல் ஆக்ஸஸரீகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் ரைடிங் மோட்கள், மைய பூட்டு, ஸ்மார்ட்போன் யுஎஸ்பி சார்ஜிங் துளை உள்ளிட்டவை அடங்குகின்றன. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஜெமோபாய் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள தள்ளுபடி சலுகைகள் நிச்சயம் இவி ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை நம் நாட்டில் அதிகரிக்க உதவும்.

Most Read Articles

English summary
Gemopai : Announces Festive Offers Upto INR 5500/-
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X