சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா?

வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டரை கூடுதல் பிரிமியம் தரத்தில் மாற்றும் வகையில் கோல்ட் விராப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணாலம்.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

வாகனங்களை மாடிஃபை செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றம் ஆகும். இருப்பினும், நாடு முழுவதும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் உலா வந்த வண்ணம் இருந்துக் கொண்டுதான் உள்ளன. மேலும், புதிதாக வாகனங்கள் மாடிஃபை செய்யப்பட்டும் வருகின்றது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

மாடிஃபிகேஷனை பொருத்தவரை அதிகபட்சம் உருவத்தை மாற்றியமைப்பது மற்றும் எஞ்ஜின் திறனைக் கூட்டுவது போன்ற நடவடிக்கைகளே அதிகம் செய்யப்படும்.

அதேசமயம், அவ்வப்போது மிகவும் வித்தியாசமான வண்ண மாற்றமும் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், இளைஞர்களின் மிகவும் பிடித்தமான ஸ்கூட்டர்களில் ஒன்றான பியாஜியோ வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 மாடலுக்கு கோல்டன் விராப் கொடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 மாடல் இந்தியாவில் விற்பனையாகும் பிரிமியம் ரக ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டர் பல்வேறு விதமான வண்ணத் தேர்வில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் தங்க நிறத்தில் அவை சந்தையில் கிடைப்பதில்லை. இதனாலயே மற்ற வெஸ்பா ஸ்கூட்டர்களைக் காட்டிலும் தனித்துவமான காட்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக அதன் உரிமையாளர் வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 மாடல் ஸ்கூட்டருக்கு தங்க நிறத்தை வழங்கியுள்ளார்.

இந்த நிறத்தில் வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டர் கூடுதல் பிரிமியம் தரம் கொண்ட ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

இந்த தனித்துவமான ஸ்கூட்டரைப் பற்றிய வீடியோவை பரிஷித் ஹான்ஸ் (கார்ஸ் ஸ்பா புனே) என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. ஸ்கூட்டருக்கு புதிய நிற மாற்றம் வழங்குவது முதல் அனைத்து செயல்களும் படமாக்கப்பட்டு அதில் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, ஸ்கூட்டரை தண்ணீர் போட்டு சுத்தம் செய்வது முதல் வண்ணபூச்சு கொடுத்து முடிப்பது வரையிலான அனைத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

பொதுவாக சந்தையில் கிடைக்கும் மற்ற வாகனங்களை அக்கக்காக பிரித்துபோட்டு புதிய வண்ணம் கொடுப்பது சுலபமானது என்றும் வெஸ்பா பிராண்ட் ஸ்கூட்டர்களில் அது சற்று கடினமானது என்றும் வாகனங்களை மாடிஃபை செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், வெஸ்பா ஸ்கூட்டரின் உடல் தேகம் அதிக வளைவு, நெலிவுகளுடன் பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பைப் போன்ற வடிவமைப்பைப் பெற்றிருப்பதே இதற்கு காரணம்.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

இதனாலயே வெஸ்பா பிராண்ட் ஸ்கூட்டர்களில் ஸ்டிக்கரை விராப் செய்யும்போது சிரமம் ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி, இதன் உடற்கூடு தனியாக கழட்டும் தன்மைக் கொண்டதாக இல்லாததும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இருப்பினும், அத்தனை சிரமங்களையும் தாண்டி மாடிஃபிகேஷன் நிறுவனம் தங்க நிற விராப்பிங் ஸ்டிக்கரை மிக நேர்த்தியாக ஒட்டி முடித்துள்ளது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

இம்மாதிரியான கோல்ட் விராப் செய்யப்பட்ட வாகனங்களை இந்தியாவில் காண்பது மிகவும் அரிது. ஆனால், கார்களில் இது மாதிரியான செயல்பாடை நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் நம்மால் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், இந்தியாவின் தங்க மனிதர்கள் என்றழைக்கப்படும் மும்பையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களின் விலையுயர்ந்த கார்களுக்கு கோல்ட் விராப் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் காணப்படும் பல கார்கள் இந்த ஸ்டைலிலேயே காணப்படுகின்றது.

சாதாரண வெஸ்பா பாத்திருப்பீங்க.. கோல்ட் விராப் செய்யப்பட்ட வெஸ்பா பாத்திருக்கீங்களா? கூடுதல் கவர்ச்சி லுக்!

அதேசமயம், தற்போது புதிய தோற்ற மாற்றத்தைக் கண்டிருக்கும் வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 ஸ்கூட்டர் நிற அப்கிரேஷனைத் தவிர வெறெந்த மாற்றமும் பெறவில்லை. எனவே, இந்த ஸ்கூட்டரின் எஞ்ஜின் திறன் மாற்றமின்றி அப்படியே காணப்படுகின்றது.

பியாஜியோ நிறுவனம் இந்த ஸ்கூட்டரை அண்மையில்தான் பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்து அறிமுகப்படுத்தியது.

இதில், பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமான ஃப்யூல்-இஞ்ஜெக்‌ஷன் திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 154.8 சிசி திறனுடைய அந்த எஞ்ஜிந் அதிகபட்சமாக 10.4 பிஎச்பி பவரையும் 10.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த ஸ்கூட்டர் எக்ஸ்-ஷோரூமில் ரூ.1.30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

Image Courtesy: Parikshit Hans [carzspa pune]/YouTube

Most Read Articles
English summary
Gold Wrap Vespa SXL 150. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X