ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

உயர் வகை ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் வாகனங்களுக்கான இறக்குமதி வரி விதிப்பு குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் விமர்சனத்தை முன் வைத்ததுடன், எதிர்ப்பையும் பதிவு செய்தார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

அமெரிக்காவில் இந்திய வாகனங்களுக்கு வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

இதில், பிரதமர் மோடி இதில் தலையிட்டு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில், இந்திய வாகனங்களுக்கு அமெரிக்காவில் வரியை அதிகரிக்க வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனத்தை பரிசீலித்த மத்திய அரசு, ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான வரி 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்தது. எனினும், இதுவும் அதிகம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே வரி விதிப்பு தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் வரி விதிப்பு முறையில் புதிய நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

இதன்படி, 1,600 சிசி திறனுக்கும் அதிமான எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கான வரி ஒற்றை இலக்கத்திற்கு குறைக்கப்பட இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் உயர் வகை மோட்டார்சைக்கிளுக்கான வரி கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

இதுவரை 75சிசி, 250சிசி, 500சிசி, 800சிசி மற்றும் அதற்கு மேல் சிசி திறன் கொண்டதாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1,600 சிசி திறனுக்கு மேலான பைக்குகள் ஒரு ரகமாகவும் இனி வரையறுப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது!

இந்த பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவில் பணிபுரிவதற்கு இந்தியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவிற்கான கட்டணத்தை குறைப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Source: ET Auto

Most Read Articles
English summary
As per reports, Central Government has decided a new tariff classification for US made motorcycles with cylinder capacity exceeding 1,600cc.
Story first published: Monday, February 17, 2020, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X