Just In
- 6 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்
இந்தியாவைச் சேர்ந்த ஓர் எந்தவொரு எந்திரத்தின் உதவியுமில்லாமல் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபல பைக் ஒன்றினை வெறும் கைகளால் உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்காக இரட்டையர்கள் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட 650 சிசி பைக்குகள் மாறி வருகின்றன. இந்த பைக்குகளுக்கு இந்தியாவில் கிடைப்பதைக் காட்டிலும் அமோகமான வரவேற்பு வெளிநாடுகளில் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் ராயல் என்ஃபீல்டு ட்வின் பைக்குகளுக்கு டிமாண்ட் உச்சத்தில் இருக்கின்றது.

இந்தியாவிலும் இதற்கு கணிசமான வரவேற்பு கிடைத்த வருவது குறிப்பிடத்தகுந்தது. அதிலும், இரட்டையர்களிலேயே அதிக வரவேற்பைப் பெறும் மாடலாக இன்டர்செப்டார் 650 உள்ளது. இந்த பைக்கிற்கே பெருமிதம் சேர்க்கும் விதமாக, இளைஞர் ஒருவர் அப்பைக்கை கைகளினாலயே சிறிய ரகத்தில் உருவாக்கியிருக்கின்றனர். இளைஞரின் இந்த திறன் பாராட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதுகுறித்த வீடியோவை கிரிஷ் ஆச்சார்யா எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமே இந்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பொதுவாக குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனமே, அதன் தயாரிப்பை பிரபலப்படுத்தும் விதமாகவும், சிறப்பிக்கும் விதமாகவும் இதுபோன்று சிறிய ரகத்தில் உருவாக்கும்.

ஆனால், முகவரி தெரியாத அந்த நபர் ராயல் என்ஃபீல்டு பைக்கின் மீதிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் இன்டர்செப்டார் 650 மாடலில் ஸ்கேல் (மாதிரி) மாடலை உருவாக்கியிருக்கின்றார். இளைஞரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் சிறிய பைக், அச்சு அசல் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மாடலை ஒத்ததாகவே இருக்கின்றது.

இதன் தோற்றம் மட்டுமின்றி சிறப்பம்சங்களும் நிஜ பைக்குகளில் இருப்பதைப் போன்ற உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, பைக்கின் முன் மற்றும் பின் பக்க வீலில் பொருத்தப்பட்டிருக்கும் சஸ்பென்ஷன் பள்ளம், மேடுகளில் இயங்குகின்ற வகையில் இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த இளைஞர், குட்டிச் சுவர் மீது அந்த சிறிய பைக்கை இயக்கிக் காட்டுகின்றார்.

இதுமட்டுமின்றி, இருக்கை, எஞ்ஜின் ஹெட், கியர்பாக்ஸ், மின் விளக்கு, கிராங்கேஸ், வீல் உள்ளிட்டை அனைத்தும் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தையும் எந்தவொரு மெஷினின் உதவியும் இன்றி அவர் உருவாக்கியிருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

மேற்கூறியவை மட்டுமின்றி, ரேடியேட்டர், உயரமான ஹேண்டில் பார், ட்யூவல் டிஸ்க் பிரேக், சைலென்சர், பிரேக் காலிபர், பிரேக் லைன், கிளட்ச் ஒயர், இன்டிகேட்டர் உள்ளிட்டவையும் ஒரிஜினல் பாகத்திற்கு இணையாக வடிவமைத்து, அதில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் இந்த குட்டி பைக்கை சட்டென பார்க்கும்போது அது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற பிம்பத்தை வழங்குகின்றது.

இதன் உடற்கூறுகள் மட்டுமின்றி நிறமும் இன்டர்செப்டார் 650 மாடல் பைக்கில் காணப்படுவதைப் போன்றே வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால், இதன் புகைப்படம் நம் கண்களை ஏமாற்றும் வகையில் இருக்கின்றது. இதற்காக சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தை சிறிய பைக் மாடலை உருவாக்கியவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 பைக்கில், 648சிசி பேரல்லல் ட்வின் எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 47.65 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

இந்தியாவில் இந்த பைக் ரூ. 2.64 லட்சம் முதல் ரூ. 2.85 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேசமயம், ட்வின் சிலிண்டர் தேர்வில் பிற நிறுவனத்தின் தயாரிப்பை நுகர்வோமேயானால், ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலையைக் காட்டிலும் இரு மடங்கு அதிக தொகையை அதற்கு செலுத்த வேண்டியிருக்கும்.
எனவேதான், இந்தியர்கள் முதல் வெளிநாட்டவர்கள் வரை இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். அதேசமயம் இதன் விலை மட்டுமின்றி ஸ்டைல் மற்றும் எஞ்ஜின் திறனும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பது கூடுதல் சிறப்பு விஷயமாக உள்ளது.