Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தாண்டு முதல் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கும் ஹார்லி டேவிட்சன்!
இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். வரும் ஜனவரி மாதம் முதல் வர்த்தக செயல்பாடுகளை முழு வீச்சில் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் ரக க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பிரம்மாண்ட க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் தனது வர்த்தகத்தை மறுசீரமைக்கும் முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல அதிரடி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக திடீரென அறிவித்தது ஹார்லி டேவிட்சன். எதிர்பார்த்த அளவு இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை இல்லாததால், இந்த முடிவை எடுத்ததாக ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. மேலும், ஹரியானாவில் செயல்பட்டு வந்த ஆலையையும் மூடியது.

இது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்திய பணியாளர்கள், டீலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அத்துடன், விற்பனைக்கு பிந்தைய சேவை கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டதால், வாடிக்கையாளர்களும் குழபத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனையை மீண்டும் துவங்குவதற்கு ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் வர்த்தக செயல்பாடுகள் முழு வீச்சில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாரண்டி மற்றும் ஹார்லி உரிமையாளர் குழுக்களுக்கான செயல்பாடுகளை தொடர முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விற்பனை, சர்வீஸ், வாரண்டி மற்றும் உரிமையாளர் குழுக்களின் செயல்பாடுகள் மீண்டும் துவங்கப்படும் என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வளரும் ஆசிய நாடுகளுக்கான பிரிவின் நிர்வாக இயக்குனர் சஜீவ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் நிலவி வந்த குழப்பம் ஓரளவு நீங்கி இருக்கிறது. அதேநேரத்தில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டீலர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.