ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை ஹோம் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி, பல புதிய திட்டங்களை ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

இந்தியாவின் பிரிமீயம் க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்தான் முதன்மையாக இருந்து வருகிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கு பெரும் ரசிக பட்டாளமும் இந்தியாவில் உள்ளது.

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

இந்த சூழலில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீட்சி கொடுக்கும் முயற்சியில் ஹார்லி டேவிட்சன் இறங்கி இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதால், அதற்கு தக்கவாறு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

MOST READ: இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

அதன்படி, கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டில் இருந்த டெலிவிரி பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக மிக பாதுகாப்பான முறையில் ஹோம் டெலிவிரி திட்டத்தை அறிவித்துள்ளது.

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

ஆன்லைன் மூலமாக அருகாமையிலுள்ள ஹார்லி டேவிட்சன் டீலரை தேர்வு முன்பதிவு செய்து கொண்டால், மோட்டார்சைக்கிள் வாங்கும் நடைமுறைகளை எளிதாக செய்ய முடியும். டீலர் பணியாளர் வேண்டிய உதவிகளை செய்து தருவார்.

MOST READ: கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடிஜி-யின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

அத்துடன், வீட்டிலிருந்தே மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெறும் திட்டத்தையும் ஹார்லி டேவிட்சன் வழங்குகிறது. இதன்மூலமாக, டீலரிலிருந்து 40 கிமீ தூரத்திற்குள் வாடிக்கையாளர் வீடு இருந்தால், இலவசமாக ஹோம் டெலிவிரி பெற முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

மேலும், கொரோனா பிரச்னையால் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் திட்டங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

MOST READ: இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா?... தரவரிசை வெளியீடு

 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஹோம் டெலிவிரி!

மேலும், சாலை அவசர உதவித் திட்டம் மற்றும் ஆண்டு பராமரிப்புத் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கலு்ககு 60 நாட்கள் வரை கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Harley-Davidson India has launched a home bike delivery program and extending service warranties in the wake of the COVID-19 induced lockdown.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X