ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்ப்பட்ட பைக்குகளை கடந்த சில வாரங்களாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது இந்நிறுவனத்தின் 2020 லோ ரைடர் எஸ் பைக் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.14.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 2020 பைக் மாடலை இந்நிறுவனம் பர்ராகுடா சில்வர் மற்றும் விவிட் ப்ளாக் என்ற இரு நிற தேர்வுகளில் விற்பனை செய்யவுள்ளது. இதில் 14.69 லட்ச ரூபாய் என்ற விலை, விவிட் ப்ளாக் நிறத்தேர்விற்கு தான். பர்ராகுடா சில்வர் நிறத்திற்கான ஷோரூம் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 'ஷாஃப்ட்டெயில்' சீரிஸின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள புதிய லோ ரைடர் எஸ் பைக்கில் 1868சிசி மில்வாக்கி-எய்ட் 114 வி-ட்வின் என்ற ஆற்றல்மிக்க என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 3000 ஆர்பிஎம்-ல் 161 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்குகிறது.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

இந்த புதிய பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்ஸ் முன்புறத்தில் ட்வின்-டிஸ்க் ப்ரேக்குடன் வழங்கப்பட்டுள்ளது. 19 இன்ச்சில் 110/90 என்ற முகவரியை கொண்ட டயரை முன் சக்கரத்தில் கொண்டுள்ள இந்த பைக் பின் சக்கரத்தில் சற்று சிறியதாக 16 இன்ச்சில் 180/70 என்ற முகவரியை கொண்ட டயரை பெற்றுள்ளது.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

308 கிலோவில் எடையை இந்த பைக் கொண்டிருந்தாலும், ரைடிங்கின்போது சிறப்பான பேலன்ஸை வழங்கவல்லது. லோ ரைடர் மாடலின் இந்த புதிய எஸ் வேரியண்ட், சிறிது கூட க்ரோம் இல்லாமல் கருப்பு நிறத்தில் தீம் புதியதாக கொண்டுள்ளது. இதனுடன் இருக்கையை ஒற்றையாக, அகலமான ஹேண்டில்பார்களுடன் இந்த 2020 பைக் பெற்றுள்ளது.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

என்ஜின் ஃபின்கள் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்கள் தான் ஹார்லி டேவிட்சனின் இந்த புதிய பைக்கிற்கு ஸ்டைலான தோற்றத்தை வழங்குகிறது. முன்னதாக இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டிற்கான வெளியீட்டாக 1200 கஸ்டம் மற்றும் ஃபேட் பாய் மாடல்களை அறிமுகப்படுத்தியிருந்தது. இதில் ரூ.10.77 லட்சத்தை விலையாக பெற்றுள்ள 1200 கஸ்டம் பைக்கை பற்றி விரிவாக அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கும் விதமாக புதிய மாசு உமிழ்வு விதி இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த புதிய சட்டத்தால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்றன.

ரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய லோ ரைடர் பைக் இந்தியாவில் அறிமுகம்...

இந்த வகையில் தான் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இவ்வாறான பிஎஸ்6 பைக்குகளை சந்தைக்கு கொண்டு வருகிறது. இந்நிறுவனம் பிஎஸ்6 அப்டேட்டை இரு எண்ட்ரீ-லெவல் மாடல்களான ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் பைக்குகளில் ஆரம்பித்து தொடர்ந்து அயர்ன் 883 பைக்கிலும் கொண்டுவந்தது. புதிய லோ ரைடர் எஸ் மாடலுக்கு அடுத்தும் சில பிஎஸ்6 பைக்குகள் இந்நிறுவனத்தில் இருந்து வரும் வாரங்களில் அறிமுகமாகவுள்ளன.

Most Read Articles
English summary
2020 Harley-Davidson Low Rider S Launched In India: Prices Start At Rs 14.69 Lakh
Story first published: Tuesday, April 7, 2020, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X