ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் புதியதாக பான் அமெரிக்கா மற்றும் ப்ராங்க்ஸ் பைக்குகளின் பெயர்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இரு பைக்குகளையும் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

முன்னதாக இந்த இரு ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் அறிமுகம் குறித்து வெளியாகியிருந்த தகவலில் இந்த இரு புதிய பைக்குகளும் 2020ல் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவினால் இவற்றின் அறிமுகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

மேலும் இந்த இரு பைக்குகளுடன் இந்நிறுவனத்தின் எதிர்கால பைக்குகள் லிஸ்ட்டில் பேரெக்னக்கிள் என்ற பெயரில் அதிக செயல்திறன் கொண்ட கஸ்டம் மாடல் ஒன்று சில எலக்ட்ரிக் கான்செப்ட்களுடன் உள்ளது. ஆட்டோமொபைல் துறை தொடர் லாக்டவுனினால் முடங்கி போய் உள்ள நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைகள், தயாரிப்பு மாடல்களின் விற்பனை மீண்டும் பழைய நிலைமைக்கு வரும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

கொரோனா வைரஸினால் கடந்த மாதத்தில் பெரும்பான்மையான அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தயாரிப்புகளின் விற்பனையில் பூஜ்ஜியத்தை தான் பதிவு செய்துள்ளன. இதில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் தப்பவில்லை.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டங்களை சரிப்படுத்தும் வகையில் இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ மேட் லெவடிச், ‘ஹார்லி டேவிட்சனுக்கு அதிக சாலைகள்' என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் நோக்கம் ஹார்லி டேவிட்சனின் புதிய தயாரிப்புகளை தற்போது உள்ள நாடுகளுடன் கூடுதல் நாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும்.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

ஆனால் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இல்லை. ஏனெனில் இந்த திட்டத்தை கொண்டுவந்த மேட் லெவடிச் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சியை கண்டுள்ளதால் தனது சிஇஒ பதவியை இழந்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

இடைகால சிஇஒ-வாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜோசேன் ஸிய்ட்ஸ் என்பவர் பதவி ஏற்று கொண்ட பின்பு இந்நிறுவனத்தின் அமெரிக்க இணையத்தள பக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் அப்டேட் இதுவாகும். மேலும் ஜோசேன் ஸிய்ட்ஸ் தான் இன்னும் சிறிது காலத்திற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை வழி நடத்தவுள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா & ப்ராங்க்ஸ் பைக்குகளின் அறிமுகங்களில் தாமதம்...

ஹார்லி டேவிட்சன் போர்டின் தலைவராக இருந்துள்ள ஸிய்ட்ஸ், விற்பனை சரிவில் இருந்து மீட்க ஹார்லிடேவிட்சனின் கிளைகளுக்கான செயல்திட்டங்களை முற்றிலுமாக புதுப்பித்துள்ளார். இதன்படி இலாபத்தை அதிகரிக்க இந்நிறுவனம் தனது அமெரிக்க சந்தையில் தீவிரமாக கவனம் செலுத்தவுள்ளது.

Most Read Articles
English summary
Harley-Davidson Pan America, Bronx Launch Delayed Till 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X