இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

மலிவான விலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரிக்கும் புதிய பைக்கின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமான சில ஸ்கெட்ச் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி டேவிட்சன் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு கொண்டுவருவதற்காக புதிய பைக் மாடல் ஒன்றின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

இதற்கிடையில் சில நாடுகளில் இருந்து வெளியேறவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் இருந்து வெளிவந்த அறிவிப்பு பைக் பிரியர்களிடையே பெரும் அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த சில நாடுகளில் இந்தியாவும் அடங்குகிறது.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

இருப்பினும் அதன் விற்பனை பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளையும் திட்டங்களையும் இந்நிறுவனம் கைவிடவில்லை. இந்த வகையில் ஹார்லி டேவிட்சன் 338ஆர் என்ற பெயரில் வெளிவரவுள்ள இந்த மலிவான மோட்டார்சைக்கிளை தயாரிப்பு நிறுவனம் அதன் சீன கூட்டணி நிறுவனமான கியாஞ்சியாங் உடன் இணைத்து வடிவமைத்துள்ளது.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

மற்றொரு பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பெனெல்லியை சொந்தமாக கொண்டுள்ள இந்த சீன கியாஞ்சியாங் நிறுவனம் விரைவில் அதன் உலகளாவிய அறிமுகத்தை காணவுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பு பணிகளை நிறைவு செய்த நிலையில் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் படம் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

ஆனால் தற்போது இணையத்தில் கசிந்துள்ள ஸ்கெட்ச் படங்கள் மலிவான விலையில் விற்பனைக்கு வரும் இந்த பைக் எவ்வாறு இருக்கும் என்பதை நமக்கு தெள்ள தெளிவாக வெளிக்காட்டுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் பெனெல்லியின் 302எஸ் இணையான-இரட்டை ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

இதன் விலை மலிவானதாக நிர்ணயிக்கப்படுவதற்கு காரணம் இதில் பொருத்தப்படவுள்ள முக்கிய ஃப்ரேம், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் உள்ளிட்டவை ஹார்லி டேவிட்சனின் சீன கியாஞ்சியாங் கூட்டணி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆனால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு உண்டான தொடுதல் இந்த பைக்கில் நிச்சயம் இருக்கும்.

இந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...

நமது துரதிர்ஷடமோ என்னமோ, இந்த மலிவான ஹார்லி டேவிட்சன் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர போவதில்லை. இதற்கு காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான், ஹரியானாவில் உள்ள தொழிற்சாலையை இந்நிறுவனம் சமீபத்தில் மூடிவிட்டது. சீனாவில் இருந்து இந்த பைக் இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது.

Most Read Articles

English summary
This is how the most affordable Harley-Davidson will look like!
Story first published: Saturday, September 26, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X