இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

இந்தியாவில் செயல்பட்டு வரும் தனது பைக் உற்பத்தி ஆலையை மூடுவதற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பிரம்மாண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் தோற்றமும், அலாதியான சைலென்சர் சப்தமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது. மேலும், உலக அளவில் பணக்காரர்களின் அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

இந்தியாவின் பிரிமீயம் க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் ஹார்லி டேவிட்சன் முதன்மையான நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு, உலக அளவில் தனது வர்த்தகத்தை சீரமைக்கும் பணிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளது. இதன்படி, பல முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறது.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

அதன் அடிப்படையில், இந்தியாவில் பிரிமீயம் வகை பைக் மாடல்களுக்கான வரவேற்பும்,விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று ஹார்லி டேவிட்சன் கருதுகிறது. மேலும், கொரோனாவால் கடந்த ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

இவற்றை மனதில் வைத்து, இந்தியாவில் வர்த்தக திட்டங்களில் பல அதிரடி முடிவுகளை ஹார்லி டேவிட்சன் எடுத்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலம் பவல் பகுதியில் செயல்பட்டு வரும் தனது பைக் உற்பத்தி ஆலையை மூடுவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

அடுத்த மாத இறுதியுடன் பவல் பைக் உற்பத்தி ஆலையில் உற்பத்திப் பணிகளை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. மேலும், ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஜீவ் ராஜசேகரன் சிங்கப்பூர் பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

மேலும், அனைத்து பைக் மாடல்களையும் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் 750 பைக் மாடல் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இந்த தகவல் உறுதியானால், ஸ்ட்ரீட் 750 பைக் மாடலின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடலாக ஸ்ட்ரீட் 750 பைக் விற்பனையில் உள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் மாடலாகவும் ஸ்ட்ரீட் 750 உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் குறித்து இதுவரை ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் இந்த வர்த்தக சீர்த்திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
According to reports, Harley Davidson is planning to shut down bike plant in India very soon.
Story first published: Friday, August 7, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X