சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வாழ்க்கையில் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக்கையாவது சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் இந்த கனவை நடைமுறையில் சாத்தியப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

ஏனெனில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனை செய்யும் பிரிமீயம் மோட்டார்சைக்கிள் மாடல்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இருந்தபோதும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை தற்போது எட்டியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த 2009ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தது.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்த சூழலில் தற்போது இந்திய மார்க்கெட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எட்டியுள்ளது. விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய இந்திய மார்க்கெட்டில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனையில் நிகழ்த்தியிருக்கும் இந்த புதிய சாதனை மகத்தானதுதான்.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

அத்துடன் இந்தியாவில் ஒரு தசாப்தத்தையும் நிறைவு செய்து அசத்தியுள்ளது ஹார்லி டேவிட்சன். அதாவது பத்து ஆண்டுகள். இதுகுறித்து ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஜீவ் ராஜசேகரன் கூறுகையில், ''நாங்கள் இந்தியாவிற்கு வரும்போது, பிரிமீயம் மோட்டார்சைக்கிள்களுக்கான மார்க்கெட்டை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்காக இருந்தது.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

பைக் ஆர்வலர்கள் விரும்பும் பிராண்டாக நாங்கள் இருப்பதில் பெருமைப்படுகிறோம்'' என்றார். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளாக இருப்பது ஸ்ட்ரீட் 750தான் (Harley-Davidson Street 750). ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுக்கு மற்றொரு பெருமையும் இருக்கிறது.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

750 சிசி மற்றும் அதற்கும் மேலான பிரிவில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான முதல் பெரிய கெபாசிட்டி பைக் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750தான் என்பதே அந்த பெருமை. இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

ஹார்லி டேவிட்சன் லைன் அப்பில் மட்டுமல்லாது, இந்தியாவின் 750 சிசி மற்றும் அதற்கும் மேலான செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாகவும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 உள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு ஒரு சில புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

இதில், ஹார்லி டேவிட்சன் பிராங்க்ஸ் ஸ்ட்ரீட் ஃபைட்டர் (Harley-Davidson Bronx Street Fighter) மாடல் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. நடப்பு 2020ம் ஆண்டின் இறுதியில், இந்திய மார்க்கெட் ஹார்லி டேவிட்சன் பிராங்க்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் செய்த வேற லெவல் சம்பவம்... என்னனு தெரியுமா?

இதுதவிர புதிய 338 சிசி மாடல் ஒன்றையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான ஹார்லி டேவிட்சன் நிறுவன பைக்குகளுடன் ஒப்பிடும்போது இதன் விலை கொஞ்சம் குறைவாக இருக்கலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Harley-Davidson Sold Over 25,000 Motorcycles In India In Last 10 Years. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X