ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

அமெரிக்கன் மோட்டார் சைக்கிள் ப்ராண்ட்டான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலையை அதிரடியாக ரூ.65,000 வரையில் குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

ஸ்ட்ரீட் 750, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துவரும் மலிவான பைக் மாடலாக விளங்குகிறது. இருப்பினும் இதனை மேலும் மலிவானதாக மாற்றும் விதமாக இந்த வி-ட்வின் மோட்டார்சைக்கிளின் விலையை ரூ.65,000 வரையில் குறைத்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

இதனால் முன்பு ரூ.5.34 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த 750சிசி பைக்கை இனி ரூ.4,69,000 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் பெறலாம். இந்த புதிய விலை நிலவரங்களை தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், இந்த ரூ.65 ஆயிரம் விலை குறைப்பு ஆனது ஸ்ட்ரீட் 750 பைக் மாடலின் விவிட் ப்ளாக் நிறத்தேர்விற்கு மட்டும் தான். அதுவே இந்த பைக்கின் மற்ற நிறத்தேர்வுகளான ஆரஞ்ச், ப்ளாக் டெனிம், விவிட் ப்ளாக் டீலக்ஸ் மற்றும் பர்ராகுடா சில்வர் உள்ளிட்டவற்றின் விலைகள் ரூ.12 ஆயிரம் வரையில் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

இந்த தள்ளுபடி விலைக்கு எந்தவொரு குறிப்பிட்ட கால அளவையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நிர்ணயிக்கவில்லை என்றாலும், ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் உங்களது கனவு வாகனத்தை வாங்க இதுவே சரியான நேரமாகும்.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

முன்னதாக இந்த வருட துவக்கத்தில் 10-வது நிறைவுவிழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்த ஸ்ட்ரீட் 750 மாடலின் லிமிடேட் எடிசனின் விலையையும் ரூ.72,000 வரையில் குறைத்திருந்தது. இதன் காரணமாக ரூ.5.47 லட்சம் என்ற விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கின் விலை சில நாட்களுக்கு ரூ.4.75 லட்சம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

அந்த வாய்ப்பை தவறவீட்டீர்கள் என்றால் உங்களுக்கானது தான் தற்போது வெளிவந்துள்ள புதிய தள்ளுபடி அறிவிப்பு. லிமிடேட் எடிசன் உள்பட ஸ்ட்ரீட் 750 பைக் மாடலில் 749சிசி, லிக்யூடு-கூல்டு, எக்ஸ் வி-ட்வின் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் 4000 ஆர்பிஎம்-ல் 59 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸை முன்புறத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர்ஸை பின்புறத்திலும் சஸ்பென்ஷன் அமைப்பாக கொண்டுள்ள இந்த 750சிசி பைக்கில் ப்ரேக்கிங்கிற்கு டிஸ்க் ப்ரேக்குகள் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Harley-Davidson Street 750 price slashed by a whopping INR 65K
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X