ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்.. 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் 2020 ஸ்ட்ரீட் ராட் பைக்கிற்கு ரூ.56 ஆயிரம் அளவில் தள்ளுபடியை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

2020 ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக் மாடலின் ஸ்போர்டியர் வெர்சனாக சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற 2020 ஸ்ட்ரீட் ராட் பைக்கின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6,55,500-ஆக உள்ளது. தற்போது இந்த விலையில் ரூ.56,000 குறைக்கப்பட்டுள்ளதால் இனி இந்த பைக் ரூ.5,99,000-லேயே விற்பனைக்கு கிடைக்கும்.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

2020 ஸ்ட்ரீட் பைக்கில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், எக்ஸ் வி-ட்வின் என்ஜினை பொருத்தி வருகிறது. பிஎஸ்6 தரத்தில் லிக்யூடு-கூல்டு சிஸ்டத்துடன் உள்ள இந்த என்ஜின் அமைப்பு தான் 2020 ஸ்ட்ரீட் 750 பைக் மாடலிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

இருப்பினும் 12.0:1 என்ற உயர் அழுத்த விகிதத்தினால் 2020 ஸ்ட்ரீட் ராட் மாடலில் டார்க் திறனை 8 சதவீதம் கூடுதலாக 4,000 ஆர்பிஎம்-ல் 65 என்எம்-ஆக இந்த என்ஜின் வெளியிடுகிறது. இந்த 2020 பைக்கானது நகர்புற சாலை பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற மாடலாகும்.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

இதில் பொருத்தப்பட்டுள்ள ட்ராக்-ஸ்டைல் ஹேண்டில்பார் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பது மட்டுமில்லாமல், ஸ்போர்ட்டியான ரைடிங் நிலைப்பாட்டையும் வழங்குகிறது. இதன் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் மற்றும் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு உள்ளிட்டவை பைக்கின் மொத்த தோற்றத்தையும் இன்னும் மெருக்கேற்றும் வகையில் உள்ளன.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் பணிக்கு பைக்கின் முன்புறத்தில் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்ஸ் மற்றும் ட்வின் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் 2020 ஸ்ட்ரீட் ராட் பைக்கிற்கு விவிட் ப்ளாக், ரிவர் ராக் க்ரே டெனிம், ஸ்டோன் வாஷ்டு வைட் பேர்ல் மற்றும் ஆரஞ்ச் என்ற 4 விதமான நிறத்தேர்வுகளை வழங்குகிறது.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

இதில் விவிட் ப்ளாக் பெயிண்ட் அமைப்பு அடிப்படை நிற தேர்வாக பெரும்பான்மையான வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ப்ரீமியம் நிற தேர்வான ஆரஞ்சிற்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.68,500 என்ற தொகையை கூடுதலாக வசூலிக்கிறது.

ஹார்லி-டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான தருணம்... 2020 ஸ்ட்ரீட் ராட்-ன் விலை குறைந்தது...

இந்த நிலையில் தற்போது எக்ஸ்ஷோரூம் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் 2020 ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் பைக்கை வாங்க நினைப்போர்க்கு இதுவே சரியான தருணம். ஆனால் எப்படியிருந்தாலும் இந்த விலை குறைப்பு சில காலத்திற்கு மட்டுமே இருக்கும். இந்த கால அளவு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்படவில்லை.

Most Read Articles

English summary
2020 Harley-Davidson Street Rod available at a flat discount of INR 55,500
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X