ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உருவாக்கி வரும் விலை குறைவான புதிய 350 சிசி பைக் மாடல் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

இந்தியா உள்ளிட்ட வளரும் ஆசிய நாடுகளுக்கு ஏற்ற விலை குறைவான பைக் மாடலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக, ஹார்லி டேவிட்சன் கனவில் இருக்கும் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய 350சிசி பைக் உருவாக்கப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சீனாவை சேர்ந்த கியான்ஜியாங் மோட்டார் நிறுவனம்தான் இந்த ஹார்லி டேவிட்சன் 350 பைக் மாடலை உற்பத்தி செய்ய இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

இதில், மற்றொரு சுவாரஸ்யத் தகவல் என்னவெனில், அடுத்த தலைமுறை பெனெல்லி டிஎன்டி 300 பைக் மாடலையும் கியான்ஜியாங் மோட்டார் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. மேலும், அடுத்த தலைமுறை பெனெல்லி டிஎன்டி 300 அடிப்படையில்தான் புதிய ஹார்லி டேவிட்சன் 350 பைக் மாடலும் வர இருக்கிறது. மேலும், இரு பைக் மாடல்களும் பல முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொள்ள இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 350 பைக் மாடல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல், படங்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால், அந்நிறுவனம் வெளியிட்ட உருவரை படமாக வெளியிடப்பட்ட டீசர் மூலமாக பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்த யூகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

அந்த வகையில், புதிய ஹார்லி டேவிட்சன் 350 பைக்கில் தற்போது பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக, ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் V-வடிவிலான இரட்டை சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின்தான் இடம்பெறும். ஆனால், இந்த பைக்கில் இணையாக அமைந்த இரண்டு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

இதுவரை 338சிசி எஞ்சின்தான் ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக்கில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 353 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் இடம்பெற இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எஞ்சின் 36 பிஎஸ் பவரை வழங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு அம்சங்களுக்கு நிகரானதாக இருக்கும்.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

மேலும், புகைப்போக்கி குழல் பக்கவாட்டில் நீண்டு செல்லாமல், எஞ்சினுக்கு கீழாக அன்டர்பெல்லி வகையிலான சைலென்சர் இடம்பெற இருப்பதும் தெரிய வந்துள்ளது. அர்பன் ஃப்ளாட் டிராக்கர் என்ற ரக வடிவமைப்பில் உருவாக்கப்படுவதாகவும் தெரிகிறது.

ஹார்லி டேவிட்சன் 350சிசி பைக் குறித்து புதிய தகவல்கள் வெளியானது!

அடுத்த ஆண்டு இறுதியில் புதிய ஹார்லி டேவிட்சன் 350 பைக் முறைப்படி அறிமுகம் செய்யப்படும். சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3 லட்சம் விலையில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. ஸிக்வீல்ஸ் தளத்தின் செய்தியைின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
American two-wheeler manufacturer, Harley-Davidson, has been working on a smaller capacity motorcycle that will be licenced to China based Qianjiang Motorcycle Co, also known as QJ Motors, for production.
Story first published: Monday, June 29, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X