சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

சீனா எதிர்பார்த்திராத ஓர் நடவடிக்கையை இந்திய நிறுவனம் ஒன்று தற்போது கையிலெடுத்துள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கை நாட்டில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. முன்னதாக, இந்திய மக்கள் 'பாய்காட் சீன' என்ற இணைய வழி போரை சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய நிறுவனங்கள் சிலவும் செயலில் இறங்கத் தொடங்கின.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

அந்தவகையில், டாடா நிறுவனம், சீன நிறுவனமான செரி உடன் மேற்கொள்ளவிருந்த வர்த்தக இணைவிற்கான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்தது.

இதேபோன்று, மஹாராஷ்டிரா மாநில அரசும், அம்மாநிலத்தில் சீன நிறுவனங்களால் செய்யப்பட இருந்த முதலீட்டிற்கு முட்டுக் கட்டைப் போட்டது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு அம்மாநிலத்தின் கையைவிட்டு நழுவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் சீனாவிற்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இந்த அதிரடி முடிவை வெளியிட்டது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இதேபோன்று, இந்திய நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் சிலவும் சீனாவிற்கு எதிராக உறவு முறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் மற்றுமொரு ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், சீனாவுடன் செய்யப்பட இருந்த பல நூறாயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை ரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இதைத்தொடர்ந்து, இந்த முதலீட்டை வேறு நாட்டில் செய்வதற்கான முயற்சியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த ஒட்டுமொத்த எதிர்ப்பிற்குமே கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நாட்டு வீரர்கள் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய வீரர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தியதே முக்கிய காரணமாக உள்ளது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

எனவேதான், மத்திய அரசு அண்மையில் சீன செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கும் தடை வழங்கியது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இவ்வாறு, ஒட்டுமொத்த இந்தியாவுமே சீனாவிற்கு எதிரான நிலையைக் கையாண்டு வரும் சூழலிலேயே ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ரூ. 900 கோடி வர்த்தகத்தை கைமாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இதுகுறித்த தகவலை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவரான பங்கத் முஞ்ஜல் உறுதிச் செய்துள்ளார். மேலும், இதனை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளமும் வெளியிட்டுள்ளது.

தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் இக்கட்டான சூழ்நிலையால் அனைத்து நிறுவனங்களுக்கும் பேரிழப்பைச் சந்தித்து வருகின்றன.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இதில், ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனமும் அடங்கும். இருப்பினும், ரூ. 900 கோடி வர்த்தகத்தின்மூலம் கிடைக்க இருந்த அனைத்து வருமானத்தையும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் உணர்விற்காகவும் இழக்க ஹீரோ தயாராக உள்ளது. எனவே, ஹீரோ நிறுவனத்தின் இந்த முடிவிற்கு மக்கள் மத்தியில் பரவலாக பாராட்டுக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் விரைவில் லூதியானவில் உள்ள தனன்சு கிராமத்தில் மிகப்பெரிய சைக்கிள் உற்பத்தி மையத்தை தொடங்க இருக்கின்றது. இதில் சீனாவிற்கு டஃப் கொடுக்கின்ற வகையில் ஹீரோ அதன் சைக்கிள்களை தயாரிக்க இருப்பதாக கூறியிருக்கின்றது.

சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?

இது சீனாவுடன் இந்தியா போட்டியிடுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதற்காக ரூ. 400 கோடி மதிப்பில் 100 ஏக்கர் நிலத்தை ஹீரோ சைக்கிள்ஸ் வாங்கியிருக்கின்றது. இங்குதான் மிகப்பெரிய சைக்கிள் வால்லீ உருவாக்கப்பட இருக்கின்றது.

Most Read Articles
English summary
Hero Cycles Cancels Business With China. Read In Tamil.
Story first published: Tuesday, July 7, 2020, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X