ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், ஸ்கூட்டர் பிரிவில் அதனால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதன் காரணமாக புதிய தயாரிப்புகளையும் புதிய அம்சங்களையும் அதன் ஸ்கூட்டர் பிரிவில் புதியது புதியதாக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

இந்த வகையில் ஹீரோ ஸ்கூட்டர் பிரிவில் சமீபத்தில் இணைந்த மாடல் தான் புத்தம் புதிய டெஸ்டினி 125. மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 125சிசி ஸ்கூட்டரில் குறிப்பிடத்தக்க அளவிலான அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக 110சிசி-யிலும் ஹீரோ டெஸ்டினி விற்பனை செய்யப்படுகிறது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர், மெடல் சக்கரம் மற்றும் அலாய் சக்கரம் என இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.65,810 மற்றும் ரூ.68,600 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

புதிய எல்இடி கைடு விளக்குகள் மற்றும் எக்ஸ்சென்ஸ் ஸ்மார்ட் சென்சார் தொழிற்நுட்பத்துடன் இந்த 125சிசி ஸ்கூட்டர் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்சென்ஸ், ரைடிங் நிபந்தனைகளை பொறுத்து ஸ்கூட்டரின் செயல்திறனை மேம்படுத்தப்படக்கூடிய சில சென்சார்களை உள்ளடக்கியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

இந்த சென்சார்களில், ஆக்ஸிஜன் சென்சார், த்ரோட்டல் பொஷிசன் சென்சார், க்ரான்க் பொஷிசன் சென்சார், வாகன வேக சென்சார், காற்று அழுத்த சென்சார், ஏர் இன்லெட் வெப்பநிலை சென்சார், என்ஜின் ஆயில் வெப்பநிலை சென்சார், பேங்க் ஆங்கிள் சென்சார் மற்றும் பக்கவாட்டு ஸ்டாண்ட் சென்சார் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹீரோ டெஸ்டினி பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ இதோ...

இந்த சென்சார்கள் ஸ்கூட்டரின் மென்மையான பயணத்தையும், அதிக ஆற்றல் மற்றும் டார்க் திறனையும், மேம்படுத்தப்பட்ட என்ஜின் ஆயுள், மேம்படுத்தப்பட்ட ரைடர் பாதுகாப்பு, விரைவான ஆக்ஸலரேஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துகின்றன.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

இவற்றினால் புத்தம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆக்ஸலரேஷன் மற்றும் மைலேஜ் 10-ல் இருந்து 11 சதவீதம் வரை மேம்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மற்ற அம்சங்களாக எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஹெட்லேம்ப், ட்ரெண்டி தோற்றத்திற்காக முன்பக்கத்தில் க்ரோம், ப்ரீமியம் தரத்தில் இரட்டை இருக்கை அமைப்பு உள்ளிட்டவை உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

இவற்றுடன் உடல் நிறத்தில் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மொபைல் சார்ஜிங் துளை & பூட் லிட் மற்றும் சேர்க்கை பூட்டு போன்றவற்றையும் ஹீரோ நிறுவனம் பொருத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு சைடு ஸ்டாண்ட் போடாததை எச்சரிக்கும் அமைப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ப்ரேக் அமைப்பு உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

டெஸ்டினி 125 ஸ்கூட்டருக்கு நோபல் சிவப்பு, கேண்டி ப்ளாசிங் சிவப்பு, பேந்தர் கருப்பு மற்றும் கஷ்கொட்டையின் அலுமினியம் உள்ளிட்டை நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி அடர்த்தி குறைந்த நிறங்களை விரும்புபவர்களுக்காக பேர்ல் சில்வர் வெள்ளை மற்றும் மேட் க்ரே சில்வர் நிறங்களும் உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 124.6சிசி ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டிரான்ஸ்மிஷன் உலர்ந்த, மையவிலக்கு கிளட்சுடன் இணைக்கப்பட்ட ஒரு மாறுபட்ட இயக்கியாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-ன் போட்டி மாடல்... ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் டிவிசி வீடியோ வெளியீடு...

விற்பனையில் போட்டியாகவுள்ள பிரபலமான ஹோண்டா ஆக்டிவா 125, சுஸுகி ஆக்ஸஸ், ஹோண்டா க்ரேஸியா உள்ளிட்டவற்றை காட்டிலும் ஹீரோ டெஸ்டினி 125 விலை குறைவான 125சிசி ஸ்கூட்டராக விளங்குகிறது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹீரோ ப்ளஷருக்கு அடுத்ததாக ஹீரோ நிறுவனத்தின் அதிகளவில் விற்பனையான இரண்டாவது ஸ்கூட்டர் மாடலாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hero Destini 125cc BS6 Scooter Xtra Features Detailed – New TVC
Story first published: Wednesday, September 30, 2020, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X