ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆட்டோ எக்ஸ்போவில் அனைத்து நிறுவனங்களும் தனது பொறியியல் வல்லமையை பரைசாற்றும் விதமாக பல்வேறு வாகனங்களை காட்சிப்படுத்தி இருந்தன. அதில், எம்மமை மிகவும் கவர்ந்த மாடல்களில் முக்கியமானதாக இப்போது நாம் பார்க்கப்போகும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூன்றுசக்கர ஸ்கூட்டர் மாடலை கூறலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஹீரோ ஏஇ3 என்ற பெயரில் இந்த புதிய மூன்றுசக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ட்ரைக் என்று குறிப்பிடப்படும் இந்த ஸ்கூட்டர் வகை வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற வாகனத்தை ஹீரோ எலெக்ட்ரிக் முதல்முறையாக ஆட்டோ எக்ஸ்போ மூலமாக பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த புதுமையான மூன்றுசக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக நேர்த்தியாகவும், பார்த்தவுடன் கவரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் இரண்டு சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

முன்புறத்தில் இரண்டு சக்கரங்களும் தலா ஒரு டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் மூலமாக சேஸீயுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறத்தில் பிரம்மாண்டமான எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. அதற்கு மேலாக பெரிய விண்ட் ஷீல்டு கண்ணாடி அமைப்பு உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பக்கவாட்டில் மிகப்பெரிய பாடி பேனல்களுடன் வலிமையான தோற்றத்தை பெற்றிருக்கிறது. இதன் அழகிய மல்டி ஸ்போக்ஸ் அலாய் வீல்களும் கவர்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கால் வைப்பதற்கு அதிக வசதியுடன் ஃபுட்போர்டு, வசதியான பெரிய இருக்கை அமைப்புடன் பார்ப்போரை கவர்ந்து இழுத்து வருகிறது புதிய ட்ரைக் வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ3 எலெக்ட்ரிக் ட்ரைக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் மற்றும் 3kWh பேட்டரியும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிமீ வேகம் வரை தொடும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 5 மணிநேரம் பிடிக்கும். ஃபுட்போர்டுக்கு கீழேதான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை எளிதாக கழற்றி மாட்டும் வசதியுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ் பகுதியில் கூடுதல் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பயண தூரத்தை அதிகரிக்க முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் வண்ணத் திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இதனை மொபைல்போன் செயலியுடன் இணைத்துக் கொண்டு பல்வேறு தகவல்களை பெற முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அசத்தும் ஹீரோவின் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் ட்ரைக் வகை வாகனங்களுக்கான வரையறை எதுவும் இதுவரை அரசாங்க விதிகளில் இல்லை. எனவே, இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வகையை அரசிடம் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளில் ஹீரோ மோட்டோகார்ப் இறங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Hero Electric company has showcased new AE3 trike electric scooter at auto expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X