இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் இந்திய சந்தையில் புதிய 'சிட்டி ஸ்பீடு' என்ற பிரிவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய சிட்டி-ஸ்பீடு பிரிவு நகர்புற சாலைகளுக்கு ஏற்ற அன்றாட ஸ்கூட்டர்களை கொண்ட பிரிவாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் நகர்புற சாலைகளுக்கு ஏற்ற ஆப்டிமா-எச்எக்ஸ், நைக்ஸ் எச்எக்ஸ் மற்றும் பாண்டோம் எச்எக்ஸ் என்ற மூன்று ஸ்கூட்டர் மாடல்கள் அடங்குகின்றன.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.57,560 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால் இவைதான் தற்போதைக்கு சந்தையில் கிடைக்கும் மலிவான இ-ஸ்கூட்டர்களாக விளங்குகின்றன. அதுவே டெல்லியில் இந்த விலை இவி வாகனங்களுக்கான சிறப்பு சலுகைகளினால் இன்னும் குறைவாகவே இருக்கும்.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக வேகத்தையும் தர-திறனையும் வழங்கக்கூடியவை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே இந்த ஸ்கூட்டர்களை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் நிறைந்த நகரத்திற்கு ஏற்ற வாகனங்களாக முன்னிறுத்துகின்றது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இவை கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற எலக்ட்ரிக் வாகனம் என தெரிவித்துள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ சோகிந்தர் கில் கூறுகையில், "தற்போதைய இ-பைக் சந்தை, குறைந்த வேகத்தில் இயங்கும் இ-பைக்குகள் மிகக் குறைந்த விலையிலும் அதிவேகத்தில் இயங்கும் இ-பைக்குகள் மிக அதிக விலையிலும் கிடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, குறைந்த பேட்டரி ஆற்றலின் மூலம் இயங்கும், 'வர்க்கத்தில் சிறந்த' செயல்திறனைக் கொண்ட எலக்ட்ரிக் பவர் மோட்டார்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மோட்டார் அமைப்புகள் தான் நகர்புற சாலைகளில் போதுமான பிக்அப்-ஐயும் வேகத்தையும் அளிக்கிறது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்ட புதிய பைக்குகள் பிரிவு இப்போது ரூ.57,560 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 70 கிமீ முதல் 200 கிமீ வரை ரேஞ்ச்சை கொண்ட பைக்குகள் உள்ளன. இந்த பைக்குகள் பேட்டரிகளையே முழுவதும் நம்பியில்லாதவாறு போதுமான சக்தி மற்றும் சிறந்த தொழிற்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இதன் விளைவாக எலக்ட்ரிக் வாகனத்தின் ரேஞ்ச் அதிகரிக்கிறது மற்றும் பேட்டரிகளின் ஆயுளும் அதிகரிக்கும் என தெரிவித்தார். ஹீரோ எலக்ட்ரிக்கின் ‘சிட்டி ஸ்பீடு' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நம் நாட்டில் 25 மாநிலங்களில் உள்ள இந்நிறுவனத்தின் 500க்கும் அதிகமான டீலர்ஷிப் மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

சிறந்த செயல்திறன், நம்பகத்தன்மை, ரேஞ்ச் மற்றும் சவுகரியத்தை வழங்கக்கூடிய இந்த இ-ஸ்கூட்டர்கள் மாசு உமிழ்வை முற்றிலும் வெளிப்படுத்தாதவை என்று தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சிட்டி ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்பட எடை குறைவான மற்றும் அதி வேகத்தில் இயங்கக்கூடிய ஸ்கூட்டர்களையும் ஹீரோ எலக்ட்ரிக் பிராண்ட் இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக, ஹீரோ எலக்ட்ரிக்கின் 3 ‘சிட்டி ஸ்பீடு’ இ-ஸ்கூட்டர்கள்...

இதனால் முதன்முறையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்போர் தாராளமாக ஹீரோ எலக்ட்ரிக் பிராண்டை தேர்வு செய்யலாம். அதிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘சிட்டி ஸ்பீடு' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவு ஆற்றலையும், நம்பகத்தன்மையையும் சரியான கலவையில் அன்றாட பயன்பாட்டிற்கு வழங்கும்.

Most Read Articles

English summary
Hero Electric Introduces New ‘City Speed’ Segment With Three Electric Scooters: Priced At Rs 57,560
Story first published: Sunday, October 18, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X