கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

உக்கிர ஆட்டம்போடும் கொரோனா வைரசால் இந்தியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 எலெக்ட்ரிக் பைக் கனவு கலைந்து போயுள்ளது.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

உலக வல்லரசு நாடுகளையும் தனது கொடூர பிடியால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இந்த வைரஸ் பரவலின் காரணமாக உலகின் அனைத்துத்துறையும் இயக்கமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மிகக் கடுமையான பாதிப்புகளை வாகனம் சார்ந்த துறைகள் சந்தித்து வருகின்றன.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

இதனை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து வாகன நிறுவனங்களும் அதன் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கின்றன. மேலும், அலுவலகங்கள் மற்றும் தயாரிப்பாலைகள் உள்ளிட்டவற்றிற்கு தற்காலிக மூடுவிழாவை அவை செய்திருக்கின்றன.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

இதுமட்டுமின்றி, புதிய வாகனங்களின் அறிமுகத்தையும் வாகன நிறுவனங்கள் தள்ளி போட்டிருக்கின்றன. அந்தவகையில், இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் மின்சார பைக்கின் அறிமுகமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

நாட்டின் இருசக்கர வாகன உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டாகார்ப்ஸ் நிறுவனம், ஹீரோ எலெக்ட்ரிக் என்ற பெயரில் பசுமை (மின்சார) வாகனங்களை தயாரித்து வருகின்றது.

முன்னதாக மின்சார ஸ்கூட்டர்களை மட்டுமே அறிமுகம் செய்து வந்த இந்நிறுவனம், தற்போது மின்சார பைக்குகளையும் அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகின்றது.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

அந்தவகையில், முதல் பைக்காக ஏஇ-47 என்ற மாடலை அது இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது. ஆனால், தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இதனால், இந்த பைக்கின் அறிமுகம் தற்போது நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுகம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படவில்லை.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

முன்னதாக ஹீரோ ஏஇ-47 மின்சார பைக் ஆறு மாதங்களுக்கு உள்ளாக அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என கூறப்பட்டது. ஆனால், இப்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலை இதனை கேள்விக் குறியாக்கியிருக்கின்றது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த மின்சார பைக்கை ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

அதேசமயம், விலை குறைவானதாக களமிறக்கப்பட்டாலும், ஹீரோ நிறுவனத்திற்கென இருக்கும் தனி சிறப்பு கெத்துடன் இந்த எலெக்ட்ரிக் பைக் காணப்பட இருக்கின்றது. இதுபோன்ற காரணங்களால் இந்தியர்கள் மத்தியில் இந்த மின்சார பைக் அதீதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக கொரோனா வைரஸ் அமைந்திருக்கின்றது.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

குறிப்பாக, மின்சார பைக்கின் அதி வேக திறன் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவையும் அதன்மீது ஈர்ப்பை அதிகரிக்க காரணமாக உள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 மின்சார பைக் அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

இந்த அதீத திறன்களுக்கு ஏற்ப ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார பைக்கில் 4000 வாட் சக்தி கொண்ட மின் மோட்டார் நிறுவப்பட உள்ளது. இதற்கு தேவையான மின் சக்தியை 48V/3.5 kWh லித்தியம்-அயன் பேட்டரி வழங்க இருக்கின்றது. இது அண்மையில் விற்பனைக்கு வந்த ரிவோல்ட் ஆர்வி400 மாடல் மின்சார பைக்கிற்கு டஃப் கொடுக்கும் திறன் ஆகும்.

பெரும்பாலும் மின்சார பைக்குகள் குறைந்த பராமரிப்பு செலவில் அதிக பலனளிப்பவையாக இருக்கின்றன.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

எனவே, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் உள்ளது. இந்த தேவையை உணர்ந்த ஹீரோ எலெக்ட்ரிக் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பாக ஏஇ-47 பைக்கை அறிமுகம் செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

இந்த மின்சார பைக் அது முன்னதாக களமிறக்கிய ஸ்கூட்டர்களைக் காட்டிலும் அதிக திறன் மற்றும் அம்சங்களைக் கொண்டதாகும்.

கொரோனா உக்கிரம்: கெத்தான ஹீரோவின் எலெக்ட்ரிக் பைக் எப்போது வரும்?

இதற்கு மின்சார பைக்கின் அதிகபட்ச வேகமாக சான்றாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் அனைத்தும் மணிக்கு அதிகபட்சமாக 50 முதல் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஏஇ-47 மின்சார பைக்கோ மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது.

மேலும், இது 0-60 கிமீ என்ற வேகத்தை பிடிக்க வெறும் 9 செகண்டுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றது.

Most Read Articles
English summary
Hero Electric First EBike AE-47 Launch Postponed. Read In Tamil.
Story first published: Saturday, April 18, 2020, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X