19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.68,900 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய கிளாமர் 125 பிஎஸ்6 பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வெர்சன் மாற்றத்தால் ஏகப்பட்ட அப்டேட்களையும் தொழிற்நுட்பங்களையும் பெற்றுவரும் இந்த புதிய பிஎஸ்6 பைக்கை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் கிளாமர் பைக்கில் உள்ள ட்யூப்லர் இரட்டை தொட்டில் வடிவிலான சேசிஸிற்கு பதிலாக புதிய டைமண்ட் கட் ஃப்ரேம்கள் இதன் பிஎஸ்6 வெர்சன் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

இதனுடன் அப்டேட் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ள இந்த புதிய பிஎஸ்6 கிளாமர் பைக்கில் நிலையான பயணத்திற்காக 100மிமீ-ல் அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இந்த பிஎஸ்6 பைக்கின் க்ரவுல் செயல்பாடுகள், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர் உள்ளிட்டவையும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

இந்த 2020 கிளாமர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 125சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.8 பிஎச்பி பவரையும் 10.6 என்எம் டார்க் திறனையும் 6,000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும்.

பிஎஸ்6 அப்டேட்டால் இந்த என்ஜின் கிளாமரின் முந்தைய தலைமுறை பைக்கை விட சுமார் 19% அதிகமான ஆற்றலை கொண்டுள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக தற்போதைய கிளாமர் பைக்கின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸிற்கு பதிலாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

கிளாமர் 125 பிஎஸ்6 பைக்கை இரு விதமான வேரியண்ட்களில் ஹீரோ நிறுவனம் தற்போது சந்தைப்படுத்தியுள்ளது. இதில் ட்ரம் ப்ரேக்குகள் வேரியண்ட் ரூ.68,900 விலையையும், டிஸ்க் ப்ரேக்குகள் ரூ.72,400 விலையையும் இந்திய எக்ஸ்ஷோரூமில் பெற்றுள்ளன.

இது இவற்றின் பிஎஸ்4 வெர்சன் பைக்குகளை விட ரூ.1,450 அதிகமாகும். ஹீரோ கிளாமர் 125 பைக்கிற்கு போட்டியாக சந்தையில் ஹோண்டா எஸ்பி125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட பைக்குகள் உள்ளன.

19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

கிளாமர் பிஎஸ்6 பைக் தவிர ஹீரோ நிறுவனம் டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களின் பிஎஸ்6 வெர்சன்களையும் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் அமலாக இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாததால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரபலமான மோட்டார்சைக்கிள்களை வேகமாக பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சந்தைக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

19% கூடுதல் ஆற்றலுடன் ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்..!

இதனால் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஹீரோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தான் தற்போது பிஎஸ்6 தரத்தில் கிளாமர் 125சிசி பைக்கை ஹீரோ நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Hero Glamour 125 BS6 Models Launched In India Starting At Rs 68,900, Ex-Showroom Delhi
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X