பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எச்எஃப் டீலக்ஸ் பைக் மாடலுக்கு கூடுதலாக மூன்று வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

ஹீரோ எச்எஃப் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மூன்று வேரியண்ட்களில் கிக் ஸ்டார்ட் உடன் அலாய் சக்கரங்கள் மற்றும் கிக் ஸ்டார்ட் உடன் ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்ட இரு வேரியண்ட்களுடன் முற்றிலும் கருப்பு நிறத்தில் ப்ரீமியம் செல்ஃப் ஸ்டார்ட் உடன் அலாய் சக்கரங்கள் என்பதும் அடங்குகிறது.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

இதில் ஸ்போக் சக்கரங்களுடனான கிக் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.48 ஆயிரமாக எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருக்கும் வேரியண்ட்களிலேயே இதுதான் விலை குறைவான வேரியண்ட் என்பதால் இனி இதுதான் எச்எஃப் பைக்கின் ஆரம்ப விலை ஆகும்.

Hero HF Deluxe Variants Latest Price (ex-showroom Delhi)
Kick start with spoke wheels (NEW) ₹48,000
Kick start with alloy wheels (NEW) ₹49,000
All-black colour variant with self start and alloy wheels (NEW) ₹57,300
Self start with alloy wheels ₹57,175 (₹500 more expensive now)
Self start with alloy wheels and i3S technology ₹58,500 (₹500 more expensive now)
பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

இவ்வளவு குறைவான விலையில் வேறெந்த ஹீரோ பைக்கும் விற்பனையாகுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் எச்எஃப் பைக் மாடலில் முதன்முறையாக கிக் ஸ்டார்ட் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களுடனான செல்ஃப் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை மற்ற நிறங்களை காட்டிலும் முற்றிலும் கருப்பு நிறத்தில் சில நூறுகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

மேலும் இந்த பைக் இதற்கு முன் விற்பனை செய்யப்பட்டுவந்த வேரியண்ட்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளிலும் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இதன் பிஎஸ்6 வெர்சனின் அறிமுகத்திற்கு பிறகு எச்எஃப்-ன் விலை அதிகரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

அதிகப்பட்சமாக ஐ3எஸ் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் அலாய் சக்கரங்கள்- செல்ஃப் ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.500 அதிகரிக்கப்பட்டு ரூ.58,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள், என்ஜின் அமைப்பு மற்றும் கூடுதல் தேர்வான ஐ3எஸ் தொழிற்நுட்பத்தை தவிர்த்து மற்ற பாகங்களை பார்க்கும் இந்த பைக் அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாவே கொண்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

ஹீரோ நிறுவனம் எச்எஃப் பைக்கில் பொருத்திவரும் 97.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 8.02 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்-ல் 8.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் உடன் 4-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

அனைத்து வேரியண்ட்களிலும் சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், 2 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இருசக்கரங்களிலும் 130மிமீ-ல் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

பிஎஸ்6 தரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் ஒரே 100cc பைக்... ஹீரோ எச்எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை குறைந்தது

எண்ட்ரீ-லெவல் பைக் மாடல் என்பதால் எச்எஃப்-ல் டிஸ்க் ப்ரேக் வழங்கப்படுவதில்லை. பஜாஜ் சிடி100, பிளாட்டினா 100 போன்ற பைக்குகள் இந்த ஹீரோ பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக இருந்தாலும், பிஎஸ்6 தரத்தில் 100சிசி-ல் எச்எஃப்-ஐ தவிர வேறெந்த பைக்கும் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைப்பதில்லை.

Most Read Articles
English summary
Hero HF Deluxe BS6 Variants Introduced; Cheaper Than Launch Price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X