ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த பைக் மாடலாகவும், அந்நிறுவனத்தின் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாகவும் கரீஷ்மா இசட்எம்ஆர் பைக் விற்பனையில் வைக்கப்பட்டு இருந்தது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளால் கரீஷ்மா பைக்கின் எஞ்சினை மேம்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதற்கு விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாடலுக்கு பதிலாக அதிக திறன் வாய்ந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

இதனால், தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணையப் பக்கத்திலிருந்து ஹீரோ கரீஷ்மா பைக் நீக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, கரீஷ்மா பைக் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட மாட்டாது என்று தெரிகிறது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

ஹீரோ கரீஷ்மா பைக்கின் பிரம்மாண்ட டிசைன் ஊரக பகுதி இளைஞர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. மேலும், ஊரக பகுதிகளில் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையையும் பதிவு செய்து வந்தது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

ஹீரோ கரீஷ்மா பைக்கில் 223 சிசி எஸ்ஓஎச்சி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 19.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இசட்எம்ஆர் பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் இருந்தது. ரூ.1.10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

இந்த நிலையில், 300 சிசி முதல் 400 சிசி ரக பைக் மார்க்கெட்டில் புதிய மாடலை கொண்டு வருவதற்கான திட்டம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருப்பதாக தெரிகிறது. தற்போது அந்நிறுவனம் 200சிசி பைக் மாடல்கள் வரை இணையப்பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

கடந்த 2003ம் ஆண்டு ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு சிறிய மாற்றங்களுடன் கரீஷ்மா ஆர் என்ற பெயரில் புதுப்பொலிவுடன் வந்தது. 2009ம் ஆண்டில் கரீஷ்மா இசட்எம்ஆர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஹீரோ ஹோண்டா கூட்டணி உடைந்த பின்னர், இந்த பைக் மாடலின் உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் தக்க வைத்தது.

ஹீரோ கரீஷ்மா பைக் விற்பனையிலிருந்து நீக்கம்!

இந்தியாவின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத அக்காலத்தில் இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பையும், வரவேற்பையும் பெற்ற மாடலாக இருந்தது.

Most Read Articles
English summary
Hero MotoCorp has discontinued Karizma and ZMR in India due to ahead of BS-6 norms.
Story first published: Saturday, February 15, 2020, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X