ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளஷர்+ பிளாட்டினம் எடிசன் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

ஏகப்பட்ட காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் மற்றும் சில கூடுதல் வசதிகளுடன் கொண்டுவரபட்டுள்ள புதிய ஹீரோ பிளஷர்+ பிளாட்டினம் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.60,950 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்டாண்டர்ட் ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரின் விலை ஸ்பெஷல் எடிசனை காட்டிலும் வெறும் ரூ.400 மட்டுமே குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் முழுவதும் புதிய ‘மேட் கருப்பு' நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் லக்சரி தோற்றத்திற்காக இருக்கை உள்பட உட்பக்க பேனல்கள் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

இதுமட்டுமில்லாமல், ஸ்கூட்டரின் மஃப்லர் பாதுகாப்பான் மற்றும் ஹேண்டில்பார் முனைகள் உள்ளிட்டவற்றில் க்ரோம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் புதியதாக வழங்கப்பட்டுள்ள ஃபெண்டர் ஸ்ட்ரிப்கள் மொத்த ஸ்கூட்டரையும் வழக்கமான ஹீரோ பிளஷர்+-ஐ காட்டிலும் கவர்ச்சிக்கரமானதாக காட்டுகின்றன.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

இத்தகைய காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து பார்த்தோமேயானால், புதிய ஹீரோ பிளஷர்+ பிளாட்டினம் எடிசன் எரிபொருள் குறைவாக உள்ளதை எச்சரிக்கும் அமைப்பு, பின் பயணிக்கு பேக் ரெஸ்ட், இரட்டை-நிறத்தில் இருக்கை, வெள்ளை நிறத்தில் ரிம் டேப்கள் மற்றும் 3டி லோகோ முத்திரை போன்ற அம்சங்களை பெற்று வந்துள்ளது.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

மற்றப்படி இயக்க ஆற்றலை வழங்கும் 110சிசி பிஎஸ்6 என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஹீரோ பிளஷர்+-இல் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி மற்றும் 8.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த புதிய எடிசன் 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் திறனை விரைவான ஆக்ஸலரேஷன் உடன் வழங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

என்ஜின் போன்று சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகளிலும் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் முதன்மை நிர்வாகி நவீன் சவுகான் பேசுகையில், ஹீரோவின் அடையாளமான பிளஷர் பிராண்ட் வாடிக்கையாளர்களுடன் ஒரு வலுவான தொடர்பில் இருக்கிறது.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

புதிய பிளஷர்+ பிளாட்டினம் அதன் மேம்பட்ட வடிவமைப்பு கூறுகளுடன் நிச்சயமாக எங்கள் ஸ்கூட்டர் வரிசையை வலுப்படுத்தவும், சவுகரியமான பயணத்தை ஸ்டைலான தோற்றத்துடன் சரியான கலபையில் வழங்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். பிளஷர்+ பிளாட்டினம் மட்டுமின்றி மேஸ்ட்ரோ எட்ஜ்125 ஸ்கூட்டரின் புதிய ஸ்டீல்த் எடிசனையும் ஹீரோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...

வரப்போகும் தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை காலத்தை குறிவைத்து வெளிவந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்கள் இந்த காலக்கட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயம் தற்போது அறிமுகமாகியுள்ள ஹீரோ பிளஷர்+ பிளாட்டினம் ஸ்கூட்டர் அட்டகாசமான ஸ்டைலால் இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும்.

Most Read Articles

English summary
Hero Pleasure+ Platinum Scooter Launched In India: Prices Start At Rs 60,950
Story first published: Saturday, October 17, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X