ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ப்ளூடூத் இணைப்பு வசதியுடை சன் கிளாஸை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இந்திய இருசக்கர வாகன உலகின் மிகப் பெரிய ஜாம்பவான் என்று போற்றப்படும் ஹீரோ மோட்டோகார்ப், புதிதாக ஸ்மார்ட் சன் கிளாஸ் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அண்மைக் காலங்களாக வாகன உற்பத்தியில் மட்டுமின்றி அதைச் சார்ந்து பயன்படும் அக்ஸசெரீஸ்களின் உற்பத்தியிலும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இதனடிப்படையில் தற்போது அதிக தொழில்நுட்பம் அடங்கிய சன் கிளாஸை அது அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடியில் சிறப்பு வசதியாக ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை செல்போனுடன் இணைக்கும்போது அழைப்பை ஏற்தல் மற்றும் இசையை கேட்டல் உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு பயனளிக்கும்.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இந்தியர்களின் எதிர்பார்ப்பை அறிந்த ஹீரோ நிறுவனம், அதன் தயாரிப்புகளை அதிக திறன் கொண்டதாகவும், நீடித்து உழைக்கும் சக்தி வாய்ந்ததாகவும் தயாரித்து வருகின்றது.

இத்துடன், மிக முக்கியமாக அதிக எரிபொருளை குடிக்காமல் குறைந்த பெட்ரோலிலேயே கணிசமான மைலேஜை வழங்குவதற்கும் முக்கியத்துவும் கொடுக்கின்றது.இதனாலேயே இந்தியாவில் அசைக்க முடியாத நிறுவனமாக ஹீரோ நீடித்து சந்தையில் இருந்து வருகின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இதைத்தொடர்ந்து, அக்ஸசெரீஸ் சந்தையில் பங்களிக்கும் விதமாக புதிய ஸ்மார்ட் சன் கிளாஸையும் அது அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போது, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஹீரோ சன்கிளாஸ், ரைடருக்கு புதுவிதமான பயண அனுபவத்தை வழங்கும் என ஹீரோ நிறுவனம் உத்தரவாதம் அளிக்கின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

குறிப்பாக ஒயர் இல்லாமல் செல்போனுடன் இணைக்கும் வசதி ஸ்மார்ட் சன் கிளாஸின் முக்கியமான அம்சமாக இருக்கின்றது. இதைக் கொண்டு செல்போனுடன் இணைக்கும்போது மியூசிக், ரோடியோ மற்றும் அழைப்பை ஏற்தல் போன்ற செயல்களை நம்மால் செய்ய முடியும். இதுமட்டுமின்றி, நேவிகேஷனின்போது வழி தடத்தையும் இந்த கிளாஸில் இருக்கும் ஸ்பீக்கர்கள் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

கூகுள் மேப் பயன்படுத்தும்போது, நாம் செல்ல வேண்டிய இலக்கிற்கு வலது பக்கம் திரும்ப வேண்டுமானால் அந்த செயலி வலது பக்கம் திரும்புமாறு அறிவுறுத்தும். இதுபோன்ற தகவலைதான் இந்த ஹீரோ ஸ்மார்ட் கண்ணாடி அதன் பயனருக்கு வழங்க இருக்கின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

பொதுவாக, ஆட்டோ அல்லது காரில் செல்லும்போது கூகுள் மேப்பைப் பயன்படுத்துவது மிக சுலபம். குறிப்பாக, பைக் தவிர மற்ற வாகனங்களில் செல்போனை ஸ்டேண்ட் வைத்து நிறுத்துவது மிக எளிது. அவ்வாறு, பொருத்திவிட்டு, புதிய பாதையில் பயணிக்கும்போது அது தரும் அனைத்து தகவல்களையும் எந்தவொரு தங்கு தடையுமின்றி வாகன ஓட்டிகளால் அறிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக, வாகனத்தை நிறுத்தாமலே தெரிந்துக்கொள்ள முடியும்.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

ஆனால், பைக்கில் செல்லும்போது இது மிகப்பெரிய சிக்கலான மற்றும் சவாலானதாக இருக்கின்றது. பரீட்சையம் இல்லாத புதிய பாதையில் பயணப்போமேயானால், கூகுள் மேப்பை பார்த்து விவரிக்க மற்றொருவரின் உதவி தேவைப்படும். இல்லையெனில் பைக்கின் டேங்க் கவரில் செல்போனை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது, அது அளிக்கும் தகவலை நம்மால் அவ்வளவு எளிதில் தெரிந்துகொள்ள முடியாது, பல்வேறு சிக்கல் நிலவும்.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இந்த அவலைநிலையை நீக்கும் விதமாக ஹீரோ ஸ்மார்ட் சன் கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நேவிகேஷன் உதவியுடன் நமக்கு தேவையான தகவலை ஸ்பீக்கர்கள் வாயிலாக வழங்கும். தொடர்ந்து, அடிக்கடி பைக்கை நிறுத்தி எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்று செல்போனை பார்க்கும் சூழ்நிலையும் இனி இருக்காது. இதனால், வாகன ஓட்டி பாதுகாப்பான பயணத்தை செய்யவும் முடிகின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இதுமட்டுமின்றி, ஹீரோவின் ஸ்மார்ட் சன்கிளாஸில் 100 சதவீத புற ஊதா (யுவி) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த கண்ணாடியை அணியும் பயனரின் கண்களுக்கு கண்புறை போன்ற எந்த நோயும் வராது. இதற்கான சான்றை அந்நிறுவனம் பெற்றிருக்கின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

அதேசமயம், காதுகளுக்கு மிக அருகில் வைத்து இந்த கிளாசைப் பயன்படுத்தும்போது, அதற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக ப்ளூடூத் 4.1 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, நல்ல தரம் வாய்ந்தவை ஆகும். சிறப்பான ஒலி அனுபவத்தையும் இந்த ஸ்பீக்கரில் எதிர்பார்க்கலாம்.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இத்தனை அம்சங்கள் இருப்பதால் இந்த சன் கிளாஸ் மிகவும் சாதாரணமான தோற்றத்தில் இருக்கலாம் என நீங்க நினைக்கக்கூடும். ஆனால், நீங்கள் நினைப்பது தவறு. இந்த ஸ்மார்ட் சன் கிளாஸ் பெயருக்கேற்பவே மிகவும் ஸ்மார்டான தோற்றத்தை அதை அணிபவருக்கு வழங்குகின்றது. அதற்கேற்ப மென்மையான வளைவுகள் மற்றும் லென்ஸின் குறுக்கே ஒரு தடிமனான சட்டகம் போன்ற சில மிகச்சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், மிக கிளாசியாக இருந்தாலும், பார்ப்பதற்கு டிரெண்டியான தோற்றத்தையும் வழங்குகின்றது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

மேலும், வழக்கமான கண்ணாடியைப் போல் ஹீரோ ஸ்மார்ட் கண்ணாடியையும் கழட்டு, மாட்டுவது மிக சுலபமான ஒன்று. குறிப்பாக வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது அதன் கழட்டி மாட்டிக் கொள்ள முடியும். இந்த அதிநவீன சிறப்பு வாய்ந்த் ஸ்மார்ட் சன் கிளாஸுக்கு ஹீரோ நிறுவனம் ரூ. 2,999 என்ற விலையை நிர்ணயித்துள்ளது.

ஹீரோ சன் கிளாஸ் அறிமுகம்... இது இருந்தால் ப்ளூடூத் ஹெட்செட்டே தேவையில்லை...

இந்த அதிக விலை சற்று அதிகமானதாக தோன்றலாம். இது அளிக்கும் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் அது பொருட்டாக தெரியாது என ஹீரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஸ்மார்ட் சன் கிளாஸ்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்பில் விற்பனைக்குக் கிடைக்கும். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் இ-ஸ்டோரான ஆன்லைன் வர்த்தக தளத்திலும் வாங்க முடியும்.

Most Read Articles
English summary
Hero Launches Smart Sunglasses In India. Read In Tamil.
Story first published: Wednesday, February 26, 2020, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X