பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இ-மேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

ஹீரோ இமேஸ்ட்ரோ கான்செப்ட் ஸ்கூட்டர், ராஜஸ்தானில் உள்ள இந்நிறுவனத்தின் ஆர்&டி தொழிற்சாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வெளிவரவுள்ள இந்த ஸ்கூட்டரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

இந்த புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள இமேஸ்ட்ரோ மாடல் தற்போதைய மேஸ்ட்ரோ எட்ஜின் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்படவுள்ளது. ஆனால் இயக்க ஆற்றலை வழங்க எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படவுள்ளது.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைப்பெற்ற ஹீரோ வோர்ல்டு 2020 நிகழ்ச்சியின் போது இதே தொழிற்சாலையில் எந்த பாடி பேனல்களும் இல்லாத இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்மாதிரி மாடல் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

இமேஸ்ட்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் இரும்பு பேட்டரி இணைக்கப்பட்ட நிரத்தர காந்த மோட்டார் பொருத்தப்படவுள்ளது. ஹீரோவின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சுவாரஸ்யமான விஷயமே, ஸ்கூட்டரை பின் நோக்கி செலுத்துவது, ஓய்வு நிலைக்கு கொண்டுவருவது மற்றும் ட்ரைவிங் மோட்களை மாற்றுவது உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தையும் இடது ஹேண்டில்பார் மூலமாக செயல்படுத்த முடியும்.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

வலது ஹேண்டில்பார் வழக்கம்போல் த்ரோட்டல் கண்ட்ரோலை மட்டுமே கொண்டிருக்கும். மற்றப்படி இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழிற்நுட்ப தகவல்கள் எதுவும் இப்போதைக்கு வெளிவரவில்லை. ஆனால் நமக்கு தெரிந்த வரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 110சிசி பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான ஆற்றலில் இயங்கும்.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

அதேபோல் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ளௌவ்டு இணைப்பு வசதி போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம். ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் எல்இடி தரத்திலும், இண்டிகேட்டர்கள் பராம்பரிய பல்ப்கள் உடன் இருக்கும்.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

தற்போதைய எரிபொருள் மேஸ்ட்ரோ மாடலில் இருந்து வித்தியாசப்படுவதற்காக இதன் எலக்ட்ரிக் வெர்சனில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், அலாய் சக்கரங்கள் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை தங்க நிறத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க்கை போன்று பின்புறத்திலும் வழக்கமான சிங்கிள் ஷாக் அப்சார்பர் தான் சஸ்பென்ஷன் அமைப்பாக வழங்கப்படவுள்ளது.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

ப்ரேக்கிற்கு சிபிஎஸ் உடன் ட்ரம் யூனிட்கள் இரு சக்கரங்களிலும் பொருத்தப்படவுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இ-மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.1 லட்சம் அளவில் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் அறிமுகமும் இந்த வருட மத்தியில் இருக்கும் என கூறப்பட்டு வந்தது.

பஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இமேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..?

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே ஆட்சி செய்து கொண்டிருப்பதால் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் அறிமுகம் 2020 இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ இருக்கலாம். இ-மேஸ்ட்ரோ ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் போட்டி மாடல்களாக பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் விளங்கும்.

Most Read Articles
English summary
Hero Maestro electric spotted in company's R&D facility in Rajasthan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X