ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சந்தையில் பல்வேறு தேர்வுகள் இருக்கும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய சர்வீஸ் கட்டமைப்பு வசதிகளை வைத்திருக்கும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு என்பது இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் முன்னுரிமை பெற்றுள்ளது. இந்த நிலையில், பிஎஸ்6 எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரில் 110.9சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், எக்ஸ்லென்ஸ் என்ற தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலில் 8 பிஎச்பி பவரையும், 8.75 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலின் அதே செயல்திறனுடன் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டரில் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் எளிதாக ஸ்டார்ட் ஆகும் தொழில்நுட்பம், மேடான சாலைகளில் தடங்கல் இல்லாமல் ஏறுவதற்கான திறனுடன் இந்த ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் ஹாலஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், டியூவல் டோன் ரியர் வியூ மிரர்கள், காம்பினேஷன் லாக் சிஸ்டம், வெளிப்புறத்தில் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சர்வீஸ் ரிமைன்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜர் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜர் வசதி, ஸ்டோரேஜ் பகுதிக்கான பூட் லைட், அழகான கிராப் ரெயில் கைப்பிடிகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் 1,843 மிமீ நீளமும், 715 மிமீ அகலமும், 1,188 மிமீ உயரமும், 1,261 மிமீ வீல்பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. தரையிலிருந்து 775மிமீ இருக்கை உயரம் கொண்டதாகவும், 155மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 112 கிலோ எடை கொண்டது. 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் சிங்கிள் சைடு ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. டிரம் பிரேக்குகளுடன் காம்பி பிரேக்கிங் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் 12 அங்குல அலாய் சக்கரமும் 90/90 ட்யூப்லெஸ் டயரும், பின்புறத்தில் 10 அங்குல அலாய் சக்கரமும், 90/100 செக்ஷன் ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் பியர்ல் ஃபேட்லெஸ் ஒயிட், மிட்நைட் புளூ, கேண்டி பிளேஸிங் ரெட், டெக்னோ புளூ, பாந்தர் பிளாக் மற்றும் சீல் சில்வர் ஆகிய ஆறு புதிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது. அலாய் வீல் கொண்ட வேரியண்ட்டிற்கு ரூ.62,450 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Hero MotoCrop has launched the new Maestro Edge 110 BS6 scooter in the Indian market. The updated scooter is sold in two variants with prices starting at Rs 60,950, ex-showroom (Delhi). The Maestro Edge 110 BS6 is offered with a host of new features and an updated engine.
Story first published: Friday, September 11, 2020, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X