2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்ட வர இருக்கும் இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

2021ம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவிருக்கும் வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இப்போதே வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்த போட்டாப் போட்டிக் கொண்டு பட்டியலை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

அந்தவகையில், இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப்-இன் தரப்பில் இருந்தும் புதிய வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது களமிறக்க இருப்பதாகக் கூறப்படும் இருசக்கர வாகனங்களைப் பற்றியே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

இந்நிறுவனம், அடுத்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனம் ஒன்றையும் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கின்றது. அதுகுறித்த தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

ஹீரோ இமேஸ்ட்ரோ:

மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் அடிப்படையிலேயே ஹீரோ நிருவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியர்களுக்காக உருவாக்கி வருகின்றது. ஏற்கனவே பஜாஜ், டிவிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்களைக் களமிறக்கிவிட்டநிலையில், விரைவில் இவர்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் ஹீரோ மோட்டாோகார்ப் மின்சார இருசக்கர வாகனத்தைக் களமிறக்க இருக்கின்றது.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

Image Courtesy: 91 Wheels

இந்த ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 80 முதல் 90 கிமீ ரேஞ்ஜில் எதிர்பார்க்ப்படுகின்றது. இதேபோன்று இதன் விலை ரூ. 1 லட்சத்திற்குள்ளாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹீரோ வெளியிடவில்லை. என இதன் விலையில் எந்தவிதமான மாற்றம் வேண்டுமானாலும் செய்யப்படலாம்.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்6:

ஹீரோ நிறுவனம் அதன் பெருவாரியான தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தி விட்டது. இதில் ஒரு சில மாடல்கள் மட்டுமே விடுபட்டுள்ளன. அதில் ஒன்றான எக்ஸ்பல்ஸ் 200டி பைக் பிஎஸ்6 தரத்தில் அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இது பிஎஸ்4 மாடலைக் காட்டிலும் ரூ. 6,800 அதிக விலையுடன் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160எஸ்:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் அறிமுகத்தின் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் 160சிசி திறன் கொண்ட ஸ்ட்ரீட்ஃபைட்டர் இருசக்கர வாகன சந்தையில் நுழைந்தது. இந்த மாடலைக் கூடுதல் மெருகேற்றி ஸ்டைலிலேயே எக்ஸ்ட்ரீம் 160எஸ் பைக் விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது. அதாவது, எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலைக் காட்டிலும் லேசான மாறுபட்ட தோற்றத்தில் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

2021ல் புதுசா 3 இருசக்கர வாகனங்களை களமிறக்கும் ஹீரோ... அப்போ வெயிட் பண்ணுறதுல தப்பே இல்ல...

இது குறிப்பாக சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கிற்கு போட்டியளிக்கின்ற வகையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளது. எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் தற்போது ரூ. 1.03 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைக் காட்டிலும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் அதிக விலையில் இப்பைக் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலைக்கேற்ப முற்றிலும் அழகிய பைக்காக இது வரவுள்ளது.

Most Read Articles
English summary
Hero MotoCorp 2021 Upcoming Launches In India. Read In India.
Story first published: Monday, December 28, 2020, 19:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X