ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவி வருவதால் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்ஸ் நிறுவனம் அதன் பைக்குகளை ஆம்புலன்ஸாக மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

கொரோனா வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இதில் பெரும் பங்களிக்கும் விதமாக வாகனத்துறைச் சார்ந்த நிறுவனங்கள் உதவியை வழங்கி வருகின்றன. அதிலும், வாகன உற்பத்தி நிறுவனங்களின் உதவி இன்றியமையாதவையாக இருக்கின்றன.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

அந்தவகையில், ஓர் உதவியை இந்தியாவின் ஜாம்பவான் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தற்போது இந்தியாவிற்கு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வருகின்றது. இதனால், சில இடங்களில் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

MOST READ: ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

குறிப்பாக, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நாட்டின் பல மாநிலங்களில் தலை விரித்தாடும் நிலையில் உள்ளது. இதனால், சில தனியார் நிறுவனங்கள் அவர்களின் டாக்ஸிகள் மற்றும் சில டெலிவரி வாகனங்களை தற்காலிக ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்த வழங்கி வருகின்றன.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் பைக்குகளையே ஆம்புலன்ஸ்களாக மாற்றி நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது ஆரம்பகட்டமாக 60-க்கும் மேற்பட்ட பைக் ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

MOST READ: பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வதற்கு காலக்கெடு மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு!

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

அவை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அவை, மாநிலங்களின் முக்கிய அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

இதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 150 சிசி திறன் கொண்ட பைக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த பைக் ஆம்புலன்ஸ்களில் அவசர உதவிக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஸ்டாக் செய்யப்பட்டிருக்கின்றன.

MOST READ: எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

குறிப்பாக, ஆக்ஸிஜன் சிலிண்டர், முதலுதவி கிட், தீயணைக்கும் கருவி மற்றும் சைரன் உள்ளிட்ட ஆரம்பநிலை மருத்துவப் பொருட்கள் அனைத்தும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமாக இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் கிராமப்புறங்கள் மற்றும் ரிமோட் பகுதிகளில் மையமாகக் கொண்டு பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே நிதியுதவியாக ரூ. 100 கோடி அறிவித்திருந்தது. இதில், ரூ. 50 கோடி நேரடியாக பிரதமரின் நிதி திட்டத்திற்கும், மீதமுள்ள ரூ. 50 கோடி மாநில அரசுகளுக்கும் அது வழங்கியிருக்கின்றது.

MOST READ: வெளியே வரவே அச்சப்படும் மக்கள்! விலையுயர்ந்த காரில் கெத்தாக வந்திறங்கிய பிரபல நடிகர்.. ஏன் தெரியுமா?

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

இதைத்தொடர்ந்தே, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவி வரும் இந்த நேரத்தில் தனது பைக்குகளை ஆம்புன்ஸ்களாக அது வழங்கியிருக்கின்றது. இதுதவிர, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகின்றது.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

அவ்வாறு நாள் ஒன்றிற்கு 15 ஆயிரம் உணவு பொட்டலங்களை அது வழங்கி வருகின்றது. ஆனால், இந்த சேவையை ஹரியானா, உத்தர்காண்ட், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கி வருகின்றது.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

இதுமட்டுமின்றி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் டீலர்களுக்கு உதவும் விதமாக விற்பனையாகாத பிஎஸ்-4 வாகனங்களை திரும்பி வாங்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Pandemic: Hero MotoCorp Donates 60 First-Responder Mobile Ambulance Across India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X