தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த இருசக்கர வாகன மாடல்களின் பெயர்களை விற்பனை எண்ணிக்கையுடன் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

ஹீரோவின் இந்த அறிக்கையின்படி, 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனையில் 14.4 சதவீத முன்னேற்றத்தை நிறுவனம் கண்டுள்ளது. 2019 நவம்பரின் மொத்த விற்பனை எண்ணிக்கையான 516,775-ல் இருந்து முந்தைய மாதத்தில் 591,091 யூனிட்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

இந்த அதிகப்படியான விற்பனைதான் ஹீரோவிற்கு இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று தந்துள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகள் அடங்குகின்றன.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

அதாவது 575,971 இரு சக்கரங்களை வாகனங்களை மட்டுமே ஹீரோ இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. மீதி 15,134 ஹீரோ இருசக்கர வாகனங்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோ ஸ்கூட்டர்களை காட்டிலும் மோட்டார்சைக்கிள்களுக்குதான் அதிகளவில் மவுசு உள்ளது.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

ஏனெனில் 2020 நவம்பர் மாதத்தில் 541,473 ஹீரோ மோட்டார்சைக்கிள்களும், வெறும் 49,654 ஹீரோ ஸ்கூட்டர்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 ஏப்ரல்- நவம்பர் மாத காலக்கட்டத்தை கணக்கில் எடுத்து பார்த்தால், 37.75 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

ஆனால் 2019 ஏப்ரல்-நவம்பரில் 46.50 லட்சம் யூனிட் வாகனங்களை ஹீரோ விற்று இருந்தது. நவராத்திரி சமயத்தில் 32 நாட்களில் 14 லட்ச யூனிட் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்தததாக ஹீரோ நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் துவண்டு கிடந்த ஹீரோ நிறுவனத்திற்கு கடந்த மாத பண்டிகை நாட்கள் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்ல போனால் 2020ஆம் ஆண்டின் மத்தியில் ஏற்பட்ட மோசமான சூழலில் இருந்து இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ வேகமாக மீண்டு வருகிறது.

தீபாவளியை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹீரோ!! விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு

கொரோனாவும் இந்த முன்னேற்றத்திற்கு ஒரு வகையில் உதவியுள்ளது. ஏனெனில் தற்போது பாதுகாப்பு கருதி பொது பயன்பாட்டு போக்குவரத்தை காட்டிலும் தனிப்பயன்பாட்டு போக்குவரத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள். இந்த நிலை இனி வரும் மாதங்களுக்கும் தொடரும் என ஹீரோ நம்பிக்கையோடு உள்ளது.

Most Read Articles
English summary
Bike Sales Report For November 2020: Hero MotoCorp Registers 14.4% Growth In Yearly Sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X