ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக பார்க்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப், அதன் ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

இந்தியாவின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. இந்த நிறுவனமே, அதன் ஸ்கூட்டரை சர்வதேச சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கு இணையானதாக மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

புதிதாக இணைப்பு (Connected Feature) வசதியையே ஹீரோ மோட்டோகார்ப் அதன் ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை அண்மையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, யமஹா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் அதன் பிரபல மாடல்களில் இணைப்பு வசதியை அறிமுகப்படுத்தின.

ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் சந்தையின் போட்டித் தன்மைக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வகையில் புதிய இணைப்பு வசதியை அதன் ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் அதன் போட்டியாளர்களுக்கு மேலும் டஃப் கொடுக்கும் வகையில் மாறியிருக்கின்றது. இதற்காக தனித்துவமான செல்போன் செயலி ஒன்றையும் அது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஹீரோ ஸ்கூட்டர்களை செல்போனுடன் இணைக்க முடியும்.

ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

அவ்வாறு இணைத்த பின்னர் ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை செல்போன் செயலி மூலமாகவே பெற முடியும். குறிப்பாக, வாகனம் இருக்கும் இடம், செல்லும் பாதை, முன்னதாக பயணித்த பகுதி என பல்வேறு தகவல்களை விரல் நுணியில் பெற முடியும். இத்துடன், திருட்டு சம்பவத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், திருட்டு அச்சம் துளியளவும் இருக்க தேவையில்லை.

ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

இதில், வழங்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதியே இந்த பயத்தைப் போக்கும் வகையில் உள்ளது. இதை வைத்து கூகுள் மேப் உதவியுடன் வாகனம் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இத்துடன், செல்போனில் வரக்கூடிய அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் ஸ்கூட்டரின் திரையிலேயேக் காணக்கூடிய வசதியும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!

இந்த புதிய தொழில்நுட்ப வசதியின் காரணமாக புதிய வாகனங்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6,499 வரை உயர வாய்ப்பு உள்ளது. தற்போது டெஸ்டினி 125 மற்றும் பிளஷர் பிளஸ் ஆகிய ஸ்கூட்டர்களின் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், எக்ஸ்பல்ஸ் 200 மாடல் பைக்கிலும் இந்த வசதி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Read Articles

English summary
Hero Offers New Connect Tech In XPulse 200, Destini 125 & Pleasure Plus Two wheeler. Read In Tamil.
Story first published: Friday, November 27, 2020, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X