நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்கை ஷோரூமில் இருந்து வாங்கிய கையோடு வாடிக்கையாளர் ஒருவர் கஸ்டமைஸ்ட் மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்த மாடிஃபைடு பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

பிட்டோ பைக் மாடிஃபிகேஷன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோவில் இந்த மாடிஃபைடு பணிகளை மேற்கொண்டுள்ளது. பாகங்களுக்கு ஏற்றாவாறு மாற்றங்களை பெற்றுள்ள இந்த பைக்கை பார்ப்பவர்கள் எவருக்கும் நிச்சயம் இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக் என்று தெரிவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதுகுறித்து வாம்ப்வீடியோ என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலமாக கஸ்டமைஸ்ட் மாற்றமாக இந்த பைக்கின் முன்புறத்தில் கஸ்டம் ஃபெண்டர்கள், ஹெட்லேம்ப், இண்டிகேட்டர் விளக்குகள் மற்றும் லைசன்ஸ் ப்ளெட் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

புதியதாக வழங்கப்பட்டுள்ள முன் மற்றும் பின்புற ஃபெண்டர்களால் இந்த மாடிஃபைடு பைக் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மற்றொரு மாற்றமாக ஸ்டாக் செமி-டிஜிட்டல் யூனிட்டிற்கு பதிலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

இந்த சந்தைக்கு பிறகான டிஜிட்டல் கன்சோல் ஆனது நிற மாற்ற வசதியை கொண்டுள்ளது. இது வெவ்வேறு விதமான லைட்டிங்கை கொண்ட சூழ்நிலையில் பைக்கிற்கு நிச்சயம் உதவும். இதனுடன் எரிபொருள் டேங்க், இருக்கை, பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின்புற டெயில் பகுதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

அதேபோல் ஸ்டாக் டயர்களுக்கு மாற்றாக ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற க்னாப்பி டயர்களை இந்த மாடிஃபைடு பைக் பெற்றுள்ளது. வழக்கமான எக்ஸாஸ்ட் அமைப்பானது தலைக்கீழான அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் மூலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த எக்ஸாஸ்ட் வெளிப்படுத்தக்கூடிய சத்தம் சாலையில் செல்வோரை நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும்.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

இருப்பினும் போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கி கொள்ளும் வகையில் இதன் சத்தம் அவ்வளவு இறைச்சலாக இல்லை. அனைத்து விதமான பயணத்திற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடிஃபைடு பேஷன் எக்ஸ்ப்ரோ பைக் சவுகரியமான ரைடிங் நிலைப்பாட்டை ஏற்றுள்ளது.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

இந்த மொத்த கஸ்டமைஸ்ட் மாற்றத்திற்கு ரூ.80 ஆயிரம் செலவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு மாற்றப்பட்டிருப்பது பிஎஸ்4 தரத்திலான பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்காகும். இதன் 109.15சிசி ஏர் கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 9.4 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 4-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படுவதற்கு முன்பாகவே பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்கின் விற்பனையை இந்தியாவில் ஹீரோ நிறுவனம் நிறுத்திவிட்டது.

நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..?

இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை, கஸ்டமைஸ்ட் பணிக்காக செலவிடப்படப்பட்ட தொகை என மொத்தம் சேர்த்து பார்த்தால் ரூ.1.4 லட்சம் வருகிறது. இந்த தொகையில் உரிமையாளர் கேடிஎம் 125 ட்யூக் பைக்கை வாங்கியிருக்க முடியும்.

Most Read Articles
English summary
Hero Passion XPro modified into adventure bike for Rs 80k
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X