ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரபலமான ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் மாடலை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.56,600-ஐ தற்போது ஆரம்ப விலையாக பெற்றுள்ள இந்த புதிய பைக்கின் விலை முந்தைய மாடல் பைக்கில் இருந்து ரூ.7,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான கிக் ஸ்டார்ட் வித் அலாய் ரூ.59,600-ஐயும், செல்ஃப் ஸ்டார்ட் வித் அலாய் ரூ.61,900-ஐயும், டாப் வேரியண்ட்டான செல்ஃப் ஸ்டார்ட் வித் அலாய் அண்ட் ஐ3எஸ் ரூ.63,110-ஐயும் எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளன.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

இந்த விலை அதிகரிப்பிற்கு தகுந்த வகையில் பைக்கின் கிராஃபிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதே 97.2சிசி ஏர்-கூல்டு என்ஜின் தான் இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் வழங்கப்பட்டிருந்தாலும் வெளிவரும் புகையை குறைப்பதற்காக எலக்ரானிக் எரிபொருள்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் புதியதாக என்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

இவற்றுடன் புதிய பிஎஸ்6 ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் கேட்டலிடிக் கன்வெர்டரையும் பெற்றுள்ளது. எரிபொருள் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை புதியதாக சேர்த்ததன் காரணமாக இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், என்ஜின் அமைப்பை சரிப்பார்க்க கூடுதலாக விளக்கு ஒன்றை பெற்றுள்ளது.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

8.36 பிஎச்பி மற்றும் 8.05 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கும் இதன் 97.2சிசி ஏர்-கூல்டு என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் மைலேஜ் அளவு 80 kmpl என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

இதை விட அதிக மைலேஜ்ஜை வழங்கக்கூடிய பைக்குகள் இதன் பிரிவில் இருந்தாலும் ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக்கின் அசூர விற்பனையில் எந்த தடையையும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த பிஎஸ்6 அப்டேட்டிற்கு முன்னதாக பெரிய அளவில் ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் மேம்படுத்தப்பட்டு பல வருடங்களாகுகின்றன.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

முன்புறத்தில் டெலிஸ்கோப் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்-ஐயும், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் உடன் உள்ள ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்-ஐயும் சஸ்பென்ஷன் அமைப்பாக கொண்டுள்ள ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா, டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ உள்ளிட்ட பிரபலமான பைக்குகள் உள்ளன.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

ஆனால் இவையும் கிட்டத்தட்ட ஸ்பிளென்டர் ப்ளஸ் பிஎஸ்6 மாடலுக்கு இணையாக விலை உயர்வை கொண்டுள்ளதால், தற்போது அறிமுகமாகியுள்ள ஹீரோ நிறுவனத்தின் இந்த புதிய பிஎஸ்6 பைக்கிற்கு 6ஜி-க்கு அப்கிரேட் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் கடுமையான போட்டியினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.7 ஆயிரம் விலை அதிகரிப்புடன் பிஎஸ்6 ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பைக் இந்தியாவில் அறிமுகம்...!

ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள ஹீரோ டீலர்ஷிப்களில் சென்றடைந்துவிட்ட 2020 ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் இவ்வாறு 7 ஆயிர ரூபாய் வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளதால் இதன் விற்பனை அடுத்த சில மாதங்களுக்கு எந்த அளவில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Up to Rs 7k hike, BS6 Hero Splendor Plus FI launch price Rs 60k
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X