ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஒன்று நம்பவே முடியாத தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அடையாளம் என்றால் அது ஸ்பிளெண்டர் பைக் மாடல் தான். மிகவும் போட்டி மிகுந்த பிரிவில் இந்த மோட்டார்சைக்கிள் மாடலை கடந்த 20 வருடங்களாக ஹீரோ சந்தைப்படுத்தி வருகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

ஹீரோ ஸ்பிளெண்டர் முழுக்க முழுக்க அதன் மைலேஜினாலேயே பிரபலமான மோட்டார்சைக்கிளாக பார்க்கப்படுகிறது. மற்றப்படி மாடிஃபை பணிகளுக்கு உட்படுத்துவதற்கு ஒன்றும் இது அவ்வளவு பொருத்தமான பைக் கிடையாது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

இருப்பினும் ஸ்பிளெண்டர் பைக் ஒன்று முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. ஏபி கஸ்டம்ஸ் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் ஹீரோ ஸ்பிளெண்டர் ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்பிளெண்டர் பைக்கின் தலை பகுதி, பக்கவாட்டு பேனல்கள், ஹெட்லைட்கள், வேகமானி மற்றும் இருக்கை என கிட்டத்தட்ட மொத்த பாகங்களும் நீக்கப்பட்டு புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்பக்க மற்றும் பின்பக்க மட்கார்டுகள், சங்கிலி மூடி உள்ளிட்டவையும் மாற்றி பொருத்தப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

அலாய் சக்கரங்கள் அப்படியே தான் உள்ளன. இருப்பினும் அவற்றில் பொருத்தப்பட்டு உள்ள அகலமான டயர்களுக்காக பின்பக்க ஸ்விங்கார்ம் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பைக்கில் முன் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

இருக்கையின் உயரத்தை அதிகரிக்க ஸ்விங்கார்மின் மீது மெட்டல் தட்டு வெல்டிங் மூலம் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் ஹீரோ பேஷன் மோட்டார்சைக்கிளில் இருந்து பெறப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாயும் நீக்கப்பட்டு சந்தைக்கு பிறகான யூனிட்டாக பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை எல்இடி தரத்தில் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. டெயில்லைட் எல்இடி ஸ்ட்ரிப் ஆக இருக்கையின் இறுதி முனையில் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பக்கவாட்டு பேனல்கள் கஸ்டம் ஆலிவ் பச்சை பெயிண்ட்டை ஏற்றுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

ஹேண்டில்பார் இந்த மாடிஃபை பைக்கில் சற்று சிறியதாக வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் சிங்கிள் பேட் சந்தைக்கு பிறகான யூனிட்டாக வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றமில்லை.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கா இப்படி இருக்கு!! யாராலும் எளிதில் நம்பவே முடியாது!

இவ்வாறான ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்திற்கு ராயல் என்பீல்டு பைக்குகள் தான் அதிகளவில் மாடிஃபை செய்யப்படும். ஹீரோ ஸ்பிளெண்டர் இத்தகைய தோற்றத்தை பெற்றிருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

Most Read Articles
English summary
Hero Splendor modified into a scrambler motorcycle looks beautiful
Story first published: Monday, December 7, 2020, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X