ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான ஸ்பிளெண்டர்+ மோட்டார்சைக்கிளின் புதிய ஸ்பெஷல் எடிசனை கருப்பு & அக்ஸெண்ட் என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா?

ஹீரோ ஸ்பிளெண்டர்+ கருப்பு & அக்ஸெண்ட் ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.64,470 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டயர்கள், செயின் கவர் மற்றும் என்ஜின் உடன் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் முழுக்க முழ்க்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா?

பைக்கின் ஸ்டைலை அதிகப்படுத்தும் விதமாக ஹீரோ நிறுவனத்தின் முத்திரை 3டி தரத்தில் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் கூடுதல் ஆக்ஸஸரீ தேர்வாக பிராண்டின் கஸ்டமைசேஷன் ப்ரோகிராமையும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்பெஷல் எடிசனில் பெறலாம்.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா?

பிரிவில் முதல் மோட்டார்சைக்கிளாக இந்த ப்ரோகிராம் வசதியை ஹீரோ ஸ்பிளெண்டர்+ கருப்பு & அக்ஸெண்ட் ஸ்பெஷல் எடிசன் பெற்றுள்ளது. இவற்றுடன் பீட்டில் ரெட், ஃபயர்லி கோல்டன் மற்றும் பம்பல் தேனீயின் மஞ்சள் என்ற மூன்று தீம்களில் ஏதேனும் ஒன்றையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

இந்த க்ராஃபிக் தீம்களின் விலை மிகவும் கவர்ச்சிக்கரமாக ரூ.899 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெறும் ரூ.1,399-ல் க்ராஃபிக்ஸ், 3டி ஹீரோ லோகோ மற்றும் ரிம் டேப் என மொத்த கிட்-ஐயும் வாடிக்கையாளர் வாங்க முடியும்.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா?

ஸ்பிளெண்டர்+ பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நேர்த்தியான கான்செப்ட், நிறுவனம் இந்தியா முழுவதும் நடத்திய ‘ஹீரோ கோலாப்ஸ்' போட்டியின் இறுதி முடிவாகும். 10000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட இந்த போட்டியின் டாப் 3 தீம் டிசைன்கள் தற்போது ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா?

அதேநேரம் எந்தவொரு கிராஃபிக்ஸ் இல்லாமாலும் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இவற்றை தவிர்த்து அதிகப்பட்சமாக 9.5 பிஎச்பி மற்றும் 8.05 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகின்றது.

நெருங்கிவரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் நேர்த்தியான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் விளைவாகவே தற்போது ஸ்பிளெண்டர்+ மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Splendor+ Black & Accent Edition Launched With Personalization Options: Priced At Rs 64,670
Story first published: Tuesday, October 20, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X