சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கை ரூ.67,300 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்6 ஹீரோ பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

ஹீரோ நிறுவனம் சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்கை செல்ஃப்-ட்ரம் அலாய் வீல் மற்றும் செல்ஃப்-டிஸ்க் அலாய் வீல் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் செல்ஃப்-ட்ரம் அலாய் சக்கர வேரியண்ட்டின் விலை தான் ரூ.67,300 ஆகும்.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

டாப் வேரியண்ட்டான செல்ஃப்-டிஸ்க் அலாய் சக்கரம் வேரியண்ட் ரூ.70,800-ஐ எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளது. புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 125சிசி ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்துடன் உள்ள இந்த என்ஜின் தற்போதைய பிஎஸ்4 என்ஜினை விட 19 சதவீதம் கூடுதலாக 7500 ஆர்பிஎம்-ல் 10.73 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்-ல் 10.6 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கவுள்ளது.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஐ3எஸ் தொழிற்நுட்பத்துடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிஎஸ்6 பைக்கில் மாறுப்பட்ட ரைடிங்கிற்காகவும், சவுகரியமான பயணத்திற்காகவும் புதிய சேசிஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

இந்த பிஎஸ்6 பைக்கில் சஸ்பென்ஷன் தற்போதைய மாடலை விட முன் சக்கரத்தில் 15மிமீ பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பின்புறத்தில் உள்ள சஸ்பென்ஷன் அமைப்பும் 7.5மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. திடமான டைமண்ட் ப்ரேம், அதிகரிக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

பைக்கின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 180மிமீ அளவில் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய சூப்பர் ஸ்பிளெண்டர் மாடலை விட 30மிமீ அதிகமாகும். இருக்கையும் சுமார் 45மிமீ நீண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு குண்டு குழியுமான சாலையிலும் பயணத்தை சவுகரியமாக மேற்கொள்ள முடியும்.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பை பெற்றிருக்கும் இந்த பிஎஸ்6 பைக் தடிமனான கோடுகளையும், தனித்துவமான க்ரோம் பாகங்களையும் டிசைன் அமைப்பாக கொண்டுள்ளது. நிறத்தேர்வை பொறுத்துவரை, வழக்கமான நிறங்களுடன் புதிய மெட்டாலிக் நெக்ஸாஸ் ப்ளூ நிறத்தையும் கூடுதலாக ஹீரோ நிறுவனம் இந்த புதிய பிஎஸ்6 பைக்கிற்கு வழங்கியுள்ளது.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

தற்போதைய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மாடல் க்ளேஸ் ப்ளாக், ஹெவி க்ரே மற்றும் கேண்டி ப்ளாசிங் ரெட் என்ற மூன்று விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சந்தைக்கு வந்தது புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 பைக்.. ஆரம்ப விலை ரூ.67,300

தொடர்ச்சியாக பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களை சந்தையில் அறிமுகப்படுத்திவரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து லேட்டஸ்ட் பிஎஸ்6 பைக்காக இந்த 2020 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero Super Splendor BS6 launched price Rs.67300, engine features update details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X