தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அட்வென்ஜெர் வகை மோட்டார்சைக்கிள் ஒன்றை காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால் அதன்பின் இந்த மோட்டார்சைக்கிள் குறித்த எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

இருப்பினும் ஹீரோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களில் ஏதேனும் ஒன்று அட்வென்ஜெர் பைக்காக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஜெய்பூரில் உள்ள கண்டுப்பிடிப்பு மற்றும் தொழிற்நுட்ப க்ளோபல் மையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்ட இந்த அட்வென்ஜெர் பைக் தற்போதுவரை அந்த இடத்தில் இருந்து அகற்றப்படவில்லை.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

பாதி தயாரிப்பில் இருப்பதுபோன்று காட்சியளிக்கும் இந்த அட்வென்ஜெர் பைக்கில் புதிய இரும்பு ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டிருப்பது மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. இதுகுறித்த கசிந்து வருகின்ற தகவல்களில் ஹீரோவின் இந்த புதிய அட்வென்ஜெர் வகை பைக் 300சிசி- 500சிசிக்கு இடைப்பட்ட மிக பெரிய என்ஜின் அமைப்பை பெறும் கூறப்படுகிறது.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

இதனால் ஹீரோவின் இந்த புதிய பைக், கேடிஎம் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அட்வென்ஜெர் 390 உடன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இந்த புதிய பைக்கின் தயாரிப்பு பணியில் ஹீரோ நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதால், தற்சமயம் சந்தையில் உள்ள அனைத்து அட்வென்ஜெர் பைக்குகளுக்கும் போட்டியாக அமைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

டக்கார் ராலியில் கலந்துகொள்வதற்காக மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ராலி என்ற இரு குழுக்கள் ஹீரோ நிறுவனத்தில் உள்ளன. இந்நிறுவனத்தின் சேசிஸ் தயாரிப்பு குழுவின் தலைமை அதிகாரியாக டேவிட் லோபேஸ் உள்ளார். இவர் தான் ட்ரையம்ப் டைகர் 800 பைக்கின் சேசிஸின் டிசைன் மற்றும் தயாரிப்பிற்கு மிக முக்கிய காரணமானவர்.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

இவர்களுடன் பிரபல பைக் பந்தய வீரரான சி.எஸ்.சந்தோஷும் ஹீரோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்நிறுவனத்தின் புதிய அட்வென்ஜெர் பைக்கை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

ஹீரோ நிறுவனம் சமீபத்தில் ராலி குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் ராலி கிட்டை அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம் அட்வென்ஜெர் வகை பைக்குகளை தயாரித்து சந்தையில் உள்ள காலியான அட்வென்ஜெர் பைக்கின் இடத்தை நிரப்ப வேண்டும் என்ற நோக்கம் இந்நிறுவனத்திடம் இருப்பது தெரிய வருகிறது.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

இந்த ஹீரோ அட்வென்ஜெர் பைக் குறித்து தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல்களில் இந்த பைக் எக்ஸ்பல்ஸ் மாடலின் 300 பேட்ஜ் அல்லது 400 பேட்ஜ்-ஆக இருக்கும் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் ராலி குழு, 450சிசி என்ஜினை பயன்படுத்தி இருந்தது. இதனால் இந்த பைக் எக்ஸ்பல்ஸ் 300சிசி அல்லது 400சிசி-ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

தயாரிப்பு பணியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 300- 500சிசி பைக்... கேடிஎம் அட்வென்ஜெர் 390க்கு போட்டியா...?

ஹீரோ நிறுவனத்தின் இத்தகைய கான்செப்ட் மற்றும் முன்மாதிரி மோட்டார்சைக்கிள்கள் பொதுவாக அறிமுகத்திற்கு முன்பாக எந்த மோட்டார் கண்காட்சியிலும் காட்சிப்படுத்த படுவதில்லை. இந்த ஹீரோ அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero Xpulse 300 – 500cc Motorcycle In The Works: Will Compete With KTM Adventure 390
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X