போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

இந்தியாவின் முன்னணி பெக்கான் விளக்கு தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஷோல்பின் இந்தியா, போலீஸ் வாகனமாக மாற்றப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கை சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போவிற்கு இணையாக நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ காம்போனெண்ட் 2020 நிகழ்ச்சியில் காட்சிக்காக வைத்துள்ளது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

ஃபரிதாபாத்தை சேர்ந்த இந்நிறுவனம் ஹீரோ எக்ஸ்பல்ஸை போலீஸ் வாகனமாக மாற்ற அவசரகால விளங்குகளை பைக்கை சுற்றிலும் பொருத்தியுள்ளது. இதனால் இந்த கஸ்டமைஸ்ட் பைக் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

எக்ஸ்பல்ஸ் பைக் மாடலை பற்றி கூற வேண்மென்றால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த பைக்கை முதன்முதலாக கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்தைக்கு கொண்டுவந்தது. எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி என இரு விதமான தோற்றத்தில் சந்தைக்கு வந்த இந்த 200சிசி பைக்கின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.94,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

குறைவான எடையில் அட்வென்ஜெர் வகை மோட்டார்சைக்கிளாக இந்த பைக் விற்பனை செய்யப்பட்டதால், மிக விரைவாகவே வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இதுமட்டுமில்லாமல் 200சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் கஸ்டமைஸ்ட் செய்வதற்கு மிகவும் ஏற்ற வாகனமாகவும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் விளங்குகிறது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

இத்தகைய கஸ்டமைஸ்ட் வாகனங்களால் விரைவில் ஷோல்பின் இந்தியா நிறுவனம் புதிய நிலையை பயணிகள் மோட்டார்சைக்கிள் விற்பனையில் பெறும் என்பது உறுதி. இதற்கு போலீஸ் வாகனங்களின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த எக்ஸ்பல்ஸ் 200டி பைக் தான் சிறந்த உதாரணம்.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

இந்நிறுவனம் வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கின் முன்புறத்தில் இண்டிகேட்டர்களுக்கு அடியில் சிவப்பு/நீலம் பெக்கான் விளக்கை பொருத்தியுள்ளது. இதே விளக்கு பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எல்இடி விளக்குகள் எளிதில் சேதம் அடையாத வகையில் க்ரேஷ் பாதுகாப்பு கண்ணாடிகளை கொண்டுள்ளது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

மற்ற கஸ்டமைஸ்ட் மாற்றங்கள் பைக்கின் செயல்பாட்டை மாற்றும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, போலீஸ் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட மிக பெரிய விண்ட்ஸ்க்ரீன்களை இந்த பைக் பெற்றுள்ளது. பின்புறத்தில் பொருட்களை எடுத்து செல்ல பாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

இந்த கூடுதல் பாக்ஸ், பின்புற இருக்கை பயணிக்கு சவுகரியமாக தலையணையும் கொண்டுள்ளது. இதேபோல் ஹீரோ தொழிற்சாலையில் தயாரிக்கப்படாத, பயணிகளுக்கு வசதியான ஃபுட்பெக்களையும் இந்த பைக் பெற்றுள்ளது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி கார்ப்ரேட்டட் வெர்சனில் மட்டும் தான் சந்தையில் கிடைக்கிறது. ஆனால் இதன் பிரபலமான அடெவென்ஜெர் வெர்சன் பைக் கார்ப் மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என இரு ஃபார்மெட்களிலும் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படுகிறது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

இந்த இரு வேரியண்ட் பைக்குகளிலும் உள்ள 200சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 18 பிஎச்பி பவரையும் 17 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது. இதன் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கிற்கு கேண்டி சிவப்பு, கருப்பு, மேட் கோல்டு மற்றும் மேய் க்ரே என்ற நான்கு நிற தேர்வுகளை ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்களும், எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ஜெர் பைக்கில் முன்புறத்தில் 21 இன்ச்சிலும், பின்புறத்தில் 18 இன்ச்சிலும் ஸ்போக் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

கஸ்டமைஸ்ட் நிறுவனங்களுக்கு இணையாக எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கை நேர்த்தியான டிசைன் பாகங்களால் மெருக்கெற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் 200டி அன்றாட பயன்பாட்டு வாகனம் என்பதால், அதற்கு இத்தகைய கஸ்டமைஸ்ட் பாகங்கள் எல்லாம் அத்தியாவசமானது அல்ல.

போலீஸ் வாகனமாக மாறிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... இது எப்படி இருக்கு...!

இருப்பினும் ஷோல்பின் இந்தியா நிறுவனத்தின் இந்த எக்ஸ்பல்ஸ் 200டி மாடல் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக உள்ளது. இதனால் இந்த பைக் போலீஸ் பணிகளுக்கு எந்தவொரு யோசனையும் இன்றி பயன்படுத்த ஏதுவான வாகனமாகும்.

Source: Rushlane

Most Read Articles
English summary
Hero Xpulse modified 200T police unit was showcased at Auto Expo Component 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X