ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ளாவிட்டாலும், ஹீரோ வோர்ல்டு 2020 என்ற தனது சொந்த மீடியா கண்காட்சியில் தனது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து கிளாமர் பிஎஸ்6, பேஷன் ப்ரோ பிஎஸ்6 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ரேலி கிட் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை தொடர்ந்து தற்போது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

அடுத்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் பெயரை ஹீரோ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் மற்ற மோட்டார்சைக்கிள்களுடன் இணைத்துள்ளது. ஸ்போர்ட்ஸ் வகை மோட்டார்சைக்கிளாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் 160-200சிசி பைக்குகளின் பிரிவில் இந்திய சந்தையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

எல்இடியில் ஹெட்லேம்ப்ஸை கொண்டுள்ள இந்த 160சிசி பைக், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஸ்மோக்டு-அவுட் டெயில் லேம்ப்ஸை பெற்றுள்ளது. மற்ற சிறப்பம்சங்களாக ஷார்ட் விஷர், நீண்டப்பட்ட பின்பகுதி மற்றும் ஒருங்கிணைந்த பக்கவாட்டு பேனல்களுடன் நேர்த்தியான டிசைனில் எரிபொருள் டேங்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

இவற்றுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஒருங்கிணைந்த என்ஜின் கில் உடன் ஹசார்ட் விளக்குகள் மற்றும் ஸ்டார்ட் ஸ்விட்ச் போன்றவையும் இந்த பிஎஸ்6 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. 17 இன்ச் 5-ஸ்போக் அலாய் சக்கரம் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பிஎஸ்6 பைக்கில் 110மிமீ மற்றும் 130மிமீ ட்யூப்லெஸ் டயர்களுடன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2020 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 160சிசி சிங்கிள்-சிலிண்டர் ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜினை வழங்கியுள்ளது. இதன் என்ஜின் 8,500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கவுள்ளது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹீரோவின் இந்த புதிய 160சிசி பைக் 0-லிருந்து 60 kmph என்ற வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். பைக்கின் அதிகப்பட்ச வேகம் 115 km/h ஆகும்.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

இந்த 2020 எக்ஸ்ட்ரீம் பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக வழக்கமான 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 276மிமீ-லும், பின் சக்கரத்தில் 220மிமீ-லும் பெடல் டிஸ்க் கவனிக்கிறது. இதனுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக உள்ளது. எக்ஸ்ட்ரீம் 160ஆர் பிஎஸ்6 பைக்கின் கெர்ப் எடை 138.5 கிலோவாகும். இதன் மூலம் சந்தையில் 160சிசி பிரிவில் உள்ள எடை குறைவான பைக்காக எக்ஸ்ட்ரீம் 160ஆர் விளங்கவுள்ளது.

ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் ஆரம்ப விலை ரூ.90,000-95,000-க்கு இடையில் நிர்ணயிக்கப்படவுள்ளது. தற்சமயம் இந்திய சந்தையில் 160சிசி பிரிவில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ்160, ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர், சுசுகி ஜிக்ஸெர் மற்றும் யமஹா எஃப்இசட்-எஃப்ஐ உள்ளிட்ட மாடல்கள் உள்ளன. இதனால் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகத்திற்கு பிறகு இந்த மோட்டார்சைக்கிள்களுடன் போட்டியிடவுள்ளது.

Most Read Articles
English summary
Hero Xtreme 160R listed on official website details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X