Just In
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 11 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. கோர்ட்டுக்கு வந்த இளம் பெண்.. ரகசிய வாக்குமூலம்.. சிக்கப்போவது யார்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...
இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த அக்டோபர் மாதம், தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ஸ்பிளெண்டர் வரிசை பைக்குகள் மற்றும் ஹீரோ நிறுவனத்தின் மற்ற கம்யூட்டர் ரக பைக்குகளின் சிறப்பான விற்பனை மூலமே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

ஆனால் ஹீரோ நிறுவனத்தால் தனது பிரீமியம் லைன்-அப்பில் இப்படியான வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய நிலையில் ஹீரோ நிறுவனம் தனது லைன்-அப்பில் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரண்டு மோட்டார்சைக்கிள்களை மட்டுமே வைத்துள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஆகியவைதான் அந்த இரண்டு பைக்குகள்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் கடந்த அக்டோபர் மாத விற்பனை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக், இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் ஓரளவிற்கு பிரபலமாகவும் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஹீரோ நிறுவனம் மொத்தம் 12,480 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 12,930 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இது 3.48 சதவீத வீழ்ச்சியாகும். என்றாலும் இது மிகச்சிறிய சரிவுதான். இந்த பைக் நடப்பாண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில், 163 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 15.3 பிஎஸ் பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த பைக் 4.7 வினாடிகளில் எட்டி விடும்.

அதே சமயம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மோட்டர்சைக்கிள் சில சிறப்பான வசதிகளையும் பெற்றுள்ளது. இதில், முழு எல்இடி லைட்டிங் அமைப்பு, ட்யூப்லெஸ் டயர்கள், முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், இரு பக்கமும் 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவை.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் சிங்கிள்-டிஸ்க் வேரியண்ட்டின் விலை 1.02 லட்ச ரூபாய் ஆகவும், ட்யூயல்-டிஸ்க் மாடலின் விலை 1.05 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் 160 என்எஸ், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் உள்ளிட்ட பைக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் போட்டியிட்டு வருகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதன் ரைடிங் பொஷிஷனும் நன்றாக உள்ளது. குறிப்பாக நகர சூழல்களில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை கையாள்வது எளிமையாக இருக்கிறது. அத்துடன் சௌகரியமான பயணத்தையும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்160ஆர் பயணிகளுக்கு வழங்குகிறது.