எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

2020 எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் மாடலை தனது பிரபலமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் எட்ஜ் ஸ்டைலிங்கில் வடிவமைக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த 200சிசி பைக் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மாடலுடன் போட்டியிடவுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

தற்சமயம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் கடந்த மாதத்தில் இருந்து அடுத்த சில மாதங்களுக்கு நடைவிருந்த அனைத்து மோட்டார் கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ வோர்ல்டு 2020 என்ற கண்காட்சியை நடத்தி வருகிறது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

இதில் முதன்மையான பைக் மாடலாக சந்தையில் பிரபலமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் அப்டேட்டான டிசைனில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதால் இதன் அளவில் பெரிய வெர்சனாக எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருவதில் ஹீரோ நிறுவனம் தீவிரமாக உள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

மிலனில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 1ஆர் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் தயாரிக்கப்பட்டு வந்தாலும், இதுகுறித்து ஹீரோ நிறுவனத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 160சிசி, ஏர்-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கவல்லது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

எடை குறைவான டைமண்ட் ஃப்ரேம் ஆல் உருவாக்கப்பட்டுள்ள ஹீரோ 160ஆர் பைக்கின் மொத்த எடை 138.5 கிலோ ஆகும். 0-லிருந்து 60 kmph வேகத்தை அடைய இந்த பைக் 4.7 வினாடிகளை எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு எடை குறைவான சேசிஸ், செயல்திறன் மற்றும் முடுக்கத்தை இந்த பைக் கொண்டுள்ளதால் இதன் அடிப்படையில் உருவாகும் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர், தற்போது 200சிசி ஸ்ட்ரீட்ஃபைட்டர் பிரிவில் உள்ள பைக்குகளுக்கு சரியான போட்டியினை அளிக்கும் என்பது உறுதி.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் 199.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 18.1 பிஎச்பி பவர் மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

இளைஞர்களின் பேவரட் பைக் மாடலாக விளங்குகின்ற பல்சர் என்எஸ்200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்குகளுடன் போட்டியிடவுள்ள இந்த புதிய 200சிசி பைக்கின் பெயர் தற்போதைக்கு ஹீரோவின் இணையத்தள பக்கத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The new Extreme 200R is based on the Hero Extreme 160R version
Story first published: Tuesday, April 14, 2020, 21:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X